பக்கம்:திருவருட்பா-11.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே 89

(இ . கு.) இருந்து + உவக்க, எனப் பிரிக்க ஏடு, சினே ஆகுபெயர்.

(வி ரை.) இறைவியின் கூந்தல் மிகுதியும் கருமை யாக இருக்கின்றமையின், அக் கருமைக்குத் தாம் ஒப்பு ஆகாத காரணத்தால் கரிய மேகமும், கருமை நீங்காத இருட்டும் தோற்று ஒடின. மக்கள் சூடும் மலர் ஆயின் அது வாடும். தேவர்கள் சூடும் மலர் வாடாது. ஆகவே தான் இறைவி சூடிய மலரை, வாடா மலர்’ என்றனர். திரு ஒற்றியூரில் உள்ள சோலைகள் தம்மகத்தே பற்பலவகை யான மலர்களே க் கொண்டிருந்தமையின் மணம் மிகுதியும் கொண்டிருந்தது. ஏடு என்பது ஈண்டு ஏடுகளையுடைய மலர்களே க் குறித்து நிற்கிறது. இறைவி இறைவனுடைய உள்ளத்தில் குடிகொண்டு இறைவன் மகிழ விளங்ககின் ருள் என்னும் குறிப்பு இப் பாடலில் காட்டப்படுகிறது. இறைவன் உள்ளம் உவப்பதற்குக் காரணம் இறைவியின் கருங் கூந்த லில் வாடா மலரும், இயற்கை மன மும், செயற்கை மணமும் நிறைந்திருப்பதல்ை என்க.

இறைவியிள் கூந்தலில் இயற்கை மணம் உண்டு என்னும் குறிப்பு, இறைவர் நக்கீரரை நோக்கி,

‘பரவி நீ வழிபட் டேத்தும் பரஞ்சுடர் திருக்கா ளத்தி அரவுநீர்ச் சடையார் பாகத் தமர்ந்தஞானப்பூங் கோதை இரவின் ஈர்ங் குழலும் அற்றாே’

என்று வினவும் வினவின் மூலம் அறியலாம். அதாவது நக்கீரன் பெண்களுக்குக் கூந்தலில் இயற்கை மணம் இல்லை என்று சாதித்தபோது, இறைவர் அவனை நோக்கி, இறைவி, யாம் ஞானப் பூங்கோதையின் கூந்தலும் அத்தகையதோ?” என்று வினவிய விளுவைக் குறிக்கும் மேலே காட்டிய செய்யுள் வரிகள். நம் ஐயா இறை விக்கு இயற்கை மனம் உண்டு என்பதை நம்மனேர் அறியவே இயல்மனம் வீச”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/99&oldid=681801" இலிருந்து மீள்விக்கப்பட்டது