பக்கம்:திருவருட்பா-12.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலே 等鲁3 தி குறிப்பிடும் வஞ்சிப்பா மட்டும் அன்று, ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, ஆகிய பாக்களும் தெரியும்' என்று கூறிஞர். சங்கப் புலவர்களுக்கு இறைவர் தலைவராக இருந்த குறிப்பை வயப்பாவலர்க்கு இறையானிர்” என்னும் வரியால் தலைவி உணர்த்தினுள். ஆசிரியப்பாவைக் குறிக்கும் தொடர் 'ஆ நகையப்பா எனும் பா’’ என்பது. ஆ. நகை அப்பா என்பதன் பொருள், ஆ! யாவரும் ஆசிரியம்’ என்று கூறும் பா. வெண்பா என்பது வெண்பர என்னும் பாட்டைக் குறிப்பதுடன் அறியாமைப்பா, வெள்ளே எனும் பா என்றும் கண்டு இறைவரால் கூறப்படுகிறது. இவ்வாதே. கலிப்பா என்பதும் கலிப்பா எனும் ஒருவகைப் பாட்டை மட்டும் உணர்த்தாமல், வஞ்சகமான பா (கலி - வஞ்சகம்) என்னும் பொருள் படும்படியும் கூறினர் என்க. இப்படிப் பாக்களின் வகைகளே இறைவர் கூறினமையால்தான் "இயல்பால் (இலக்கண வகையால்) மொழிந்தருள்கின் ருர்,” எனத் தலைவி கூறிகுள். வெண்பா என்பது இயற்சீர் வெண்தளேயும், வெண்சீர் வெண்தளையும் பெற்று ஒர் அடிக்கு நான்கு சீர் கொண்டு ஈற்று அடிமட்டும் மூன்று சீர்களைப் பெற்று, காசு, தான், மலர், பிறப்பு என்னும் வாய்பாட்டால் முடிவது. இந்த இலக்க னங்களைப் பெற்று இரண்டடியால் வரின் குறள் வெண்பா என்றும், மூன்றடியால் வரின் சிந்தியல் வெண்பா என்றும், தான்கடியால் வரின் நேரிசை வெண்பா என்றும், நான்கடி களில், இரண்டாவது அடியில் தாலாவது சீர் தனிச் சொல் இன்றி வரின், இன்னிசை வெண்பா என்றும் நான்கிற்கு மேற்பட்ட அடிகளுடன்,ஏழடிகளுக்குள் வருவது பஃருெடை வெண்பா என்றும் கூறப்படும். ஆசிரியப்பா என்பது பெரும்பாலும் ஈர் அசைச் சீர்களே ப் பெற்று ஒர் அடிக்கு நான்கு சீர்களேக் கொண்டு பல அடிக 5ாால் பாடப்படுவது. ஆனால், மூன்றடிகளுக்குக் குறையாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/114&oldid=913173" இலிருந்து மீள்விக்கப்பட்டது