பக்கம்:திருவருட்பா-12.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芝 திருவருட்பா இங்கிதமாலையில் உள்ள விருத்திங்கள் நவரசங்களில் (ஒன்டான் சுவைகளில்) காம ரசம் பொருந்தப் பெற்றவை. அதாவது இன்பச் சுவை அமையப் பெற்றவை. என்தன் முலேயைத் தொடுகின் ருர் இதுதான் சேடி என்னேடி என்பது காமச் சுவைதானே? (3) ஒன்பு:ன் சுவைகள் ஆவன நகைச் சுவை, வீரச் சுவை, அவலச் சுவை { துக்கம், அச்சச் சுவை, இழிவுச் சுவை, வியப்புச் சுவை, காமச் சுவை, சினச் சுவை (கோபம் சாந்தச் சுவை gfāj列, இவ்வாறு நம் வள்ளலார், காய்ச்சுவை அமைந்த ஒரு நூலயே ஏன் பாடிர்ை?' என்னும் ஐயம் சிலரிடை எழக் கூடும். அதற்கு விடை சிலர் தம் ஐயா அவர்களுக்குப் பக்திரசம் (பக்திச் சுவை) பொருக்கிய பாடல்களத்தாம் பாடத் தெரியுமே ஒழியக் காதல் சுவை ததும்பும் பாடல் கனப் பாடத் தெரியாது' என்று கூறிய காரணத்தால் காதல் சுவை அமைந்த நூலையும் தம்மால் பாடக் கூடும் என்பதை உணர்த்தவே இந்த இங்கிதமாலே எனும் நூலைப் பாடிஞர் என்க. ' மேன்னுடை மன்றத்து ஒலேத் துர்க்கினும் தன்னுடை ஆற்றல் உணரார் இடையினும் மன்னிய அவைஇடை வெல்லுறு பொழுதினும் தன்னை மறுதலை பழித்த காலயும் தன்னேப் புகழ்தலும் தகும்புல வோற்கே" என்று இலக்கணம் கூறுகின்றமையின், தம்மைப் பழித்த தல்ை தம் ஆற்றலைக்காட்ட தம் வள்ளலார் இக் காம ரச நூலைப் பாடினுர் என்பது பொருத்தம் தானே ! இந்நூலுக்கு இங்கிதமாலே என்னும் பெயர் இட்ட மைக்குக் காரணம் யாதோ? எனில், அதையும் ஈண்டே அறிவோமாக. இங்கிதம் என்பதன் பொருள் குறிப்பு என்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/12&oldid=913185" இலிருந்து மீள்விக்கப்பட்டது