பக்கம்:திருவருட்பா-12.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை 3. பரிமேலழகர் இங்கிதம் என்பதை விளக்கும்பொழுது குறிப்பல் நிகழும் உறுப்பின் தொழில்' என்று விளக்கினர். அதாவது தனது கருத்தைத் தன் ைேடு சேர்ந்தவர் குறிப்பாக அறிந்து கொள்ளுமாறு உண்டாகும் கண் முதலிய அவய வங்களின் தொழிலாய்க் கண் சிமிட்டல், தலையைச் சொரிதல் தலையை அசைத்தல் முதலான குறிப்புகளாம். இடியா நயத்தின் நகைக்கின்ருர் இதுதான் சேடி என்னேடி (7.5) என்னும் வரியில் காமக் குறிப்பு இருத்தலக் காண்க. மால, ஈண்டுப் பாமாலை. பல மணமுடைய மலர்களால் அழகுறத் தொடுத்ததொரு மாலேபோல இந்நூல் காமச் சுவை நிறைந்த பல பாடல்களால் தொடுக்கப்பட்டமையின் இங்கிதம:இல எனப்பட்டது. நம் சுவாமிகள் இங்கிதம் என்பதற்குக் குறிப்பு என்பது மட்டும் பொருள் என்று கொள்ளாமல், அடையாளம், இனிமை, எண்ணக்குறிப்பு, எண்ணம், கருத்து, அறிவு, சமிக்ஞை, நோக்கம் என்றும் பொருள் கூறியுள்ளனர். இந்தப் பொருள்களின் ¤-5. 5. ເດັກ இங்கிதமா8லப் பாடல் களில் ஆங்காங்குக் காணலாம். இங்கித ம:3லயின் ஒவ்வொரு பாடலிலும் மூன்றுபேர் காட்சி அளிக்கின்றனர். அவர்களே தல்வன், தலவி, தோழி ஆவர். ஈண்டுத் தலவன், திருஒற்றியூர்ப் பெருமான். தலவி, பெயர் குறிக்கப்பெருத மணமாகாத கன்னிப் பெண். அந்தத் தலைவி ஈண்டு ஆன்மாவாகிய சிற்சத்தி ஆவாள். தோழியின் பெயரும் இதில் குறிக்கப்பட்டிலது. ஆல்ை, இதுதான் சேடி என்னேடீ என்று வரும் தொடர், சேடி ஒருத்தி இருக்கின்ருள் என்பதைக் காட்டுகிறது. இந்தச் சேடி பராசத்தியாகிய உயிர்த்தோழி ஆவாள். இறைவணுகிய தலைவனிடத்தில் ஆன்மாவாகிய தலைவி ஒன்றுபட்டு இன்புற விரும்பும் உண்மைக் குறிப்பு இந்நூலில் ஊடுருவி உள்ளதை ஆய்ந்து அறியவும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/13&oldid=913207" இலிருந்து மீள்விக்கப்பட்டது