பக்கம்:திருவருட்பா-12.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை # 2 இதனை நீ வரைந்து' என்னும் தொடரால் உணரலாம். வாைத்த என்பது சொன்ன என்றும் பொருள் தரும். காலம் என்னும் சொல்லினே, கம்+ அலம் எனப்பிரித்து ஈற்றில் உள்ள அலம் என்பதை நீக்கினுல், கம் என நிற்றலைக் காண்க. 'அக்கம்மை (கபாலத்தை)க் கையில் கொண்டுள்ளோம்' என்று இறைவர் கூறிஞர் என்று கூறினும் அமையும். (78) ஒன்றும் பெருஞ்சீர் ஒற்றி நகர் உடையீர் யார்க்கும் உணர்வளியீர் என்றும் பெரியீர் நீர்வருதற் கென்ன நிமித்தம் என்றேன்யான் துன்றும் விசும்பே காண்என்ருர் சூதாம் உமது சொல்என்றேன் இன்றுன் முலைதான் என்கின்ருர் இதுதான் சேடி என்னேடீ. (இ - பெ. தோழி பெருஞ் சிறப்புப் பொருந்திய திருஒற்றியூரை இருப்பிடமாக உடையவரே யாவராலும் அறிதற்கரியவ:ே எக்காலத்தும் அழியாத பெருமை யுடைய வரே! நீர் வருகைக்குக் காரணம் யாது? என்றேன். அப்போது இவர், நெருங்கின மேகமே அதற்குக் காரணம்: என்ற் சொன்னர். அதற்கு நான், உமது சொல்லானது சூதாயிருக்கிறது என்று சொன்னேன். அதற்கு இவர் 'இப்போது அப்படி இருப்பது உன் முலயேயாம்' என்று சொல்லுகின் ருர். இதன் பொருள் என்னடி?” (எ . து.) (அ சொ.) ஒன்றும் பொருந்திய, நிமித்தம் - காரணம் விசும்பு - மேகம், நீர் . நீங்கள், தண்ணிள். சூது - வஞ்சகம், சூதாடு கருவி. துன்றும் - நெறுங்கின. . (இ - கு.) உணர்வு + அறியீர், வருதற்கு - என்ன, இன்று-உன், எனப் பிரிக்க. (வி - ரை.) தலைவி சுவாமியை நீர் (நீங்கள்) இங்கு வரக் காரணம் யாது?’ என்று வினவிஞள். இறைவன் நீர் என்பதற்கு நீங்கள் என்னும் பொருளே ஏற்காமல் நீர் (மழை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/132&oldid=913213" இலிருந்து மீள்விக்கப்பட்டது