பக்கம்:திருவருட்பா-12.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை $ 2.5 தலைவி கூறினுள். திருமாலாகிய பசுவின் இடைக்கன்று, மன்மதன். திருமாலுக்கு மூன்று பிள்ளைகள், முதல் பிள்ளே பிரமன், இடைப்பிள்ளை (நடுப்பிள்ளே) மன்மதன். கடைசிப் பிள்கள பிரத்தியும்னன். (இந்த மூன்ருவது பிள்ளை திருமாலின் கிருட்டிகுவதாரத்தில் பிறந்தவன். திருமாலேப் பசு என்று கருதியற்கு ஏற்ப, அத் திருமாலாம் பசுவின் பின்னே யாம் மன்மதன், கன்று என்று குறிக்கப்பட்டான். தலைவி, இறைவனிடம் உங்கள் பசுவின் கன்று (மன்மதன்) எனக்குக் காம வேட்கையை உண்டுபண்ணி உடலை மெலியச் செய்து, என் கைக் கன்றை (வரேயல்களே, விழச் செய்தது" என்றனள். ஒரு கன்று மற்ருெரு கன்றை முடித்ததே. இது வியப்பு அன்ருே' என்று (கன்று என்பது பசுக் கன்றையும், வளையலையும் குறிக்கும்) தலைவி கூறக் கேட்ட தலைவர், மன்மதன் (கன்று) உருவிலியாக இருந்தும், உன் கை வளையல்களே மட்டும் விழச்செய்ய வில்லை, உன் மாலையையும், ஆடையையும் கூட முடித்தது' என்று கூறினர். காம வேட்கையில், மாதங்களின் உடல் மெலிந்து மாலையும், ஆடையும் நெகிழ்ந்துவிடும். தலைவி பசுக்கன்று, கன்றை முடித்தது என்ருள். சுவாமி, கன்றை மட்டும் முடிக்கவில்லை.பிணை(பெண்மானையும்) கல(ஆண்மானையும்) கூட முடித்தது பார். இது வியப்பு இல்லையோ?" என்றனர். பிணையை முடித்தது என்பதற்கு மாலையை விழச் செய்தது என்பது பொருளாயினும், வேடிக்கையாகப் பிணேயைப் (பெண் மானேயும்) முடித்தது என்றும் கூறியவாரும். அவ்வாறே கன்று, கலே (ஆடையை) முடித்தது என்பது பொருளாயினும், கலேயை (ஆண் மானேயும்) முடித்தது என்னும் சொல்லியபடியாம், இறைவர் பிரமனுடைய பிள்ளைகளாகிய சனகாதி முனி வர்களுக்குக் கல்லால விருட்சத்தின்கீழ்த் தட்சிணுமூர்த்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/136&oldid=913224" இலிருந்து மீள்விக்கப்பட்டது