பக்கம்:திருவருட்பா-12.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. திருவருட்பா இந்நூற் பாடல்களில் அமைத்த அகப் பொருள்துறை, 'தலைவி பாங்கிக்கு உரைத்தல்' என்பது. அதாவது தலைவி தலைவன்பால் கண்ட கேட்ட குறிப்பு மொழிகளைத் தன். தோழிக்குச் சொல்லியது. இந்தத் துறை அமைப்பு, ! உன் முகிலமேல், இருவார் இடுநீ என்கின் ருர் இதுதான் சேடி என்னேடி" (1) என்னும் வரியில் இருப்பதைக் காண்க. இவ்வாறே நூல் முற்றிலும் இத்துறையின் கருத்துகள் அமைந் திருப்பதைக் காண்க. - இந்நூல் முதல் பாட்டின் தொடக்கத்தில், 'பாடாண் தினை' என்றும், கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர், 'தயந்த பக்கம்' என்றும் குறிக்கப்பட்டிருப்பதைக் காண, லாம். ஆகவே, இந்தத் தலைப்புகளின் பொருளையும் அறிதல் இன்றியமையாததாகும். பாடாண்திணை என்பது ஒருவனுடைய புகழ், வன்மை, கொடைக்குணம், அன்பு ஆகிய இவற்றைத் தெரிந்து கூறுவ தாகும். இது புறத்தினயின் பால்படும். இந்த விளக்கத்தின் படி இந் நூலில் காட்சி அளிக்கும் தலைவராம் திருஒற்றியூர்த் தியாகரிடம் மேலே குறிப்பிடப்பட்ட அத்தனப் பண்புகளும் பொருந்தி இருப்பதின் உண்மையினை இங்கிதமாலப் பாடல் களில் காணலாம். ஆகவே, இவை பாடாண்திணைக்குரியன. ஆயின.

கடவுள் மாட்டு மானிடப் பெண் டிர் நயந்த பக்கம் " என்பதன் பொருள் 'தெய்வத்தை மானிடப்பெண் காதல் கொண்ட பகுதி' என்பது. இவ்வாறு காதல் கொள்ளுதல் மரபு. குமா?" என்று சிலர் எண்ணலாம். மரபுதான் என்ப தைத் தமிழர்களின் ஒழுகலாற்றை ஒளிமறைவு இன்றி உணர்த்துகின்ற ஒல்காப் பெருமை வாய்ந்த தொல்காப்பியர், தம் இலக்கண நூலில், காமம்பகுதி கடவுளும் வரையார்" என்று ஒரு நூற்பாலில் அமைத்துள்ளனர். இதற்கு விளக்கம் தந்த உச்சிமேல் புலவர்கொள் தச்சிஞர்க்கினியர், அது
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/14&oldid=913232" இலிருந்து மீள்விக்கப்பட்டது