பக்கம்:திருவருட்பா-12.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 திருவருட்பா பாக வசியஞ் செய்தலை யுடையீர், என்று சொன்னேன். அதற்கு இவர், தாமல்லோம். எம் மகன்தான் வசிகன் : என்ருள். அதற்குமேல் தான், வளர்கின்ற காமமாகிய பசிய மாலையை யுடையேன்” என்றேன். அதற்கு இவர், பட் டத்தை அவிழ்த்துக் காட்டுவையாயின் பொருத்தப் பார்ப் டோம் என்கிருச். இதன் பொருள் என்னடி ? (எ . து.) (அ - சொ. ஒசிய ஒடிய இடுகு சிறிய மகன் - முருகன். வசியன் - வசப்படுத்துவன், வைசிய இனத்தான் தொடை - மாலை. பட்டம் - ஆடை இசைய பொருந்த. (இ . கு.) காண், முன்னிலை அசைச்சொல். வளர் காமம், வினேத்தொகை. (வி. சை.) தலைவி, இறைவரை வசியர் (யாவரையும் வசப்படுத்த வல்லவர்) என்று கூறிஞன். இறைவர் வைசி யம், என்பதற்குத் தலைவிகொண்ட பொருளை ஏற்காமல், வைசியன் (செட்டி) என்று பொருன் கொண்டு நாம், வைசியன் அல்லோம். எம் மகன் ஆருகனே, வைசியன்’ (செட்டி என்றனர். முருகப்பெருமான் வள்ளியம்மையாரின் திருக்கரங்களில் வளையல் இடச் சென்றமையின் வளையல் காரச் செட்டியாயின்ை. அடுத்துத் தல்வி, காமப் பசியத் தொடை உறிறேன்’ என்தனள். அதாவது காமமாகிய தொடையை மலே) உற்றேன் என்பது. கால என்பது காம மயக்கம் ஆகும். இறைவர் தொடை என்பதற்குத் தலைவி கருதிய பொருளே ஏற்காமல், காலுடன் சேர்த்த தொடை என்தும், பசி என்பதற்குக் காமத் தேமன் என்றும் தலைவி கூறியதாகக் கொண்டு உன் தொடை யில் இதுக்கும் காமத் தேமன் நீ உன் ஆடையை அவிழ்த் துக் காட்டிகுல் தாம் பார்ப்போம்’ என்று கூறினர். ஒற்றி இருந்தே மயக்கின்ற என்பதற்குத் தள்ளி இருந்தே மயக்குகின்ற என்றும் பொருள் கூறலாம். (82)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/143&oldid=913238" இலிருந்து மீள்விக்கப்பட்டது