இங்கிதமால் 1 35 (அ - சொ.) சிலம் - ஒழுக்கம். திண்மை - வன்மை உய்ந்திட - பிழைக்க. ஆலம் - விடம், ஆலஇலே, களம் - கழுத்து. ஏலம் - மயிரில் பூசப்பெறும். வாச%ன எண் ணெய் (மயிர்ச் சாத்து). குழல் - கூத்தல், (இ - கு.) உலகு, இட ஆகுபெயர். உலகு + உய்த்திட எனப் பிரிக்க. (வி - சை.) பிரம்மாதி விட்டுணு மூர்த்திகள் தாம் தாம் பிரம்மம் என்று செருக்குற்றிருந்தனர். அச்செருக் துடையவர்களே அச்சூலத்தால் அடக்கி உலகக் குழப்பத்தை அடக்கினர். ஆதலின், தாம் கையில் சூலத்தை வைத்திருப் பதாகக் கூறினுர். தலைவி திண்மையில் ஒர் சூலம் படைத்தீர்; ஏன்?" என்று கேட்டனள். அதற்கு மேலே கூறிய விடை பொருத்தும். மேலும், தலைவி கேட்ட விணுவிற்கு வேறு ஒரு பொருளும் உண்டு, அதாவது திண்மையில் ஓர் சூல், அம்பு அடைந்தீக் ஏன் ?” என்பதாகும். அவ்வாறு பிரித்து வினவின், வன்மையான மேகத்தில் ஏன் சூல் கொண்ட (கருக்கொண்ட) நீரை அடைத்து வைத்தில் என்பது பொருள் ஆகும். அப்போது மையில் என்பதற்கு மேகத்தில் என்றும், அம்பு என்பதற்கு நீர் என்றும், சூல் என்பதற்குக் கரு என்றும் பொருள் கொள்க. அதற்கும் விடையாக இறைவர் *உலக மக்கள் உய்ய மேகத்தில் நீரை அடைத்தோம்’ என்து கூறினுள் எனவும் கொள்ளலாம். தலைவி, இறைவரை 'ஆலத் தைக் கண்டத்தில் உடையீர்' என்ற:ைன். அவள் ஆலம் என்பதற்கு விடம் என்னும் கருத்தில் அவ்வாறு கூறிஞன். ஆளுல், இறைவர் ஆலம் என்பதற்கு ஆலஇலை எனக் கொண்டு நீ ஆலத்தை (ஆல இலையை) வயிற்றில் உடைய வளாய் இருக்கின்ருய்’ என்றனர். மாதர்களின் வயிற்றிற்கு, ஆல் இலையை உவமை கூறுவது புலவர் மரபு.
பக்கம்:திருவருட்பா-12.pdf/146
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
