இங்கிதமாலை 5 கடவுள் மாட்டுக் கடவுள் பெண்டிர் நயப்பனவும், அவர் (கடவுள்) மாட்டு மானிடப் பெண்டிர் நயப்பனவும், கடவுள் மாளிடப் பெண்டிரை நயப்பனவும் பிறவுமாம்" என்று எழுதியுள்ளனர். பின்னர்க் கூறப்பட்ட இரண்டு நிகழ்ச்சிகளும் இங்கிதமாகிலப் பாடங்களில் பொருந்தி இருப்பதைக் காண்க. எண்ணு தருகே வருகின்ருர் இதுதான் சேடி என்னே டி. (2) என்ப தைக் கடவுள் மானிடப் பெண்டிரை நயப்பதற்கு எடுத்துக் காட்டாகக் கொள்க. வருகை உவந்தீர் என்தன நீர் மருவி அணேதல் வேண்டும் (28) என்பதைக் கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயப்பதற்கு உதாரணமாகக் கொள்க. ஆகவே, இப் பாடல்கள் கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் தயந்தயக்கம் என்று கூறியிருப்பது பொருத்தம் எனக் கொள்க. கடவுள் ஆவார் சிவபெருமானே என்பதை அறுதியிட்டு உறுதியாகக் கூற முன்வந்த புறப்பொருள் வெண்பா மாகல் என்னும் நூலின் ஆசிரியரான ஐயனுரிதளுர், "முக்களுன் முயக்கம் வேட்ட மக்கள் பெண்டிர் மலிவுரைத்தன்று' என்று அறிவித்திருத்தல் காண்க. மேலும் ஒரு தலைப்பு நூலின் தொடக்கத்தில் காணப்படு கிறது. அது விஞ உத்தரம் என்பது. விகு உத்தமாவது கேள்வியும் பதிலும் ஆகும். இந்த அமைப்பு இங்கித மாலையில் இருப்பதைக் காணலாம். தலைவி, நீர் யார் ?" என்று வினவிள்ை. அதற்குச் சிவபெருமான், நண்ணுள் இடத்தும் அம்பலத்தும் நடவ தவர் நாம்' என்ருர், (2) இஃது உத்தரம்தானே? இவ்வாறே வின உத்தரம் அமைந்த பாடல்களைத் திருவிணேயாடல் புராணத்தில் வளையல் விற்ற படலத்தில் ஆறு முதல் பதின்மூன்ருவது எண்கள் வரையில் காணலாம். இதுவரையில் இங்கிதமாலே இன்னது என்பதையும், அதை ஒட்டிய தலைப்புகளின் விளக்கங்களையும் ஒருவாறு கண்டோம். இனி இந்நூலின் முதலில் உள்ள காப்புச் செய்யுளின் பொருளே அறிந்து நூலுக்குள் செல்வோமாக. திருச்சிற்றம்பலம்.
பக்கம்:திருவருட்பா-12.pdf/15
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
