பக்கம்:திருவருட்பா-12.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை # 39. இ பொ.) தோழி ! தான் தவமானது தங்கப் பெற்ற சிறப்பினையுடைய திருஒற்றியூர் போல என்னே நினைத்து, என் வீட்டை அடைந்தீர், என்மேல் மகிழ்ச்சி கொண்டு தேவரீருடைய திருவுள்ளம் திரும்பியதோ? என்றேன். அதற்கு இவர், உனக்கு நன்மையுண்டாகும்படி யும் மங்களம் உண்டாகும்படியும் உன் மனமானது எம்மீது திரும்பியது. அதை அறிந்தன்ருே விரும்பி இங்கே வத்தேசம்’ என்று சொல்லுகின்ருள். இதன் கருத்து என்னடி?”. (எ-து.) (அ - சொ. மனே - வீடு. உவத்து - மகிழ்த்து. சிவம்தன்மை, மோட்சம், மங்களம், சுயம். இவர்த்து - விரும்பி, (இ - கு. தினத்து + என், உவத்து + என் திரும் பிற்று + அதன. தேர்ந்து + அன்றே, இவர்த்து + இங்கே அகணத்தார் எனப் பிரிக்க. {வி - ரை.) தலைவி, இறைவர் தம்மீது இரக்கம் கொண்டு வந்ததாகக் கூறிஞன். ஆளுல் இறைவன், சிவம் (மங்களம், தன்மை) உண்டாக வத்ததாகக் கூறிஞர். மங்கனம் உண்டாக வந்தோம் என்று கூறியதன் பொருள், உன்னே மணந்து உனக்கு மங்களம் உண்டாக வத்தோம் ஈண்டுச் சிவம் என்ற சொல்லே நம் ஐயா பயன்படுத் தியதில் சிறந்த பொருள் செறிவு உண்டு. அதாவது சீவன் தன் உள்ளத்தைச் சிவத்தின்மீது திருப்பியபோது சிவம் தானுக வரும் என்பதாம், சிவம் தங்கிட என்பதற்கு மங்கனம் ఒపోLఉ, தன்மை உண்டாக, என்னும் பொருளுடன் மோட்சம் உனக்குச் சிந்திக்க என்றும் பொருள் கூறலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/150&oldid=913255" இலிருந்து மீள்விக்கப்பட்டது