பக்கம்:திருவருட்பா-12.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமால 翁5割 னேன். அதற்கு இவர், 'இப்பொழுதே கடல் சூழ்ந்த இவ் உலகத்தில் நீ எம்மிலும் பத்துப்பங்கு ஏழ்மை புடையவனா வாய்' என்று இனிதாகிய அன்புகொண்டு சொல்லுகின்ருச். இதன் பொருள் என்னடி? (எ . து.) (அ சொ.) தேர் - நேர்மை, செம்மை. எழில் - அழகு. அடிகன் - தேவரீர். பலி - பிச்சை, ஏழ்மை - வறுமை, எளிமை, ஏழை. இன்னே . இவ்வாதே. தேயம் - அன்பு. (இ கு.) என் --நேர், பத்து + ஏழ்மை, இனிமை + நேயம், கொண்டு - உரைக்கின் ருர் எனப் பிரிக்க. ஒத்தி யிடை இடை ஏழன் உருபு. என்னே இரக்கக் குறிப்பைக் காட்டும் இடைச்சொல். (வி - ரை.) இறைவன் எல்லாம் உடையவராக இருத் தும் பிச்சை எடுக்கின் குரே இவர் ஏழை ஆயிஞர் போலும்: என்று தலைவி இழிவாகப் பேசிளுள் அதற்கு இறைவர், நீ பத்துப் பங்கு ஏழ்மை (ஏழமை, எளிமை) உடையை" என் தனர். இதன் கருத்து, 'நாம் ஏழையே நீ கடலிடை எழு கின்ற பது மை போலும்’ என்று கூறிஞர். அதாவது கஉன் டைப் பிறந்த பொம்மை போன்ற இலக்குமி போலும் என்பது. 'நீ என்ன! இலக்குமி போன்ற செல்வம் படைத்தவளா? ” என்று அவளைத் திருப்பிக் கேட்டவாகும். ஏழ் என்பது ஏழு என்னும் எண்ணுப் பெயரைக் குறித்துப் பின், புணர்ச்சி இலக் கணப்படி ஏழு என்பது, எழு என்று வினைப்பகுதியாக தின்றது அவ்வாறே பத்து என்பதும் இலக்கணப் புணர்ச்சியில் பது என்று நின்று அதனுடன் மை சேர்ந்து பதுமை என் ருகி, இச் சொல் உவம ஆகுபெயராய் இலக்குமியைக் குறித்தது என்க. அப்போது கடலிடை எழு பதுமை’ என்று அமையும். பத்து ஏழ்மை உடையாய் போலும் என்பதற்கு நீயும் பத்து மடங்கு ஏழ்மை (வறுமை) உற்றும் எம்மைப் போலப் பிச்சை எடுப்பாய் போலும்!" என்றும் பொருள் கொள்ளலாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/162&oldid=913282" இலிருந்து மீள்விக்கப்பட்டது