பக்கம்:திருவருட்பா-12.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை 15を க்ஷேத்திரக் கோவைத் தாண்டகத்தில் குறித்துள்ளனர். சிவ பெருமானும், உமாதேவியாரும் பறையன், பறைச்சியாக வேடம் பூண்டு வயலில் தசற்று நட்டுப் பணி புரித்த தலம். இச் செயலைச் சுந்தரர் பொருட்டுச் செய்ததாகக் கூறுவர். இங்குள்ள சிவபெருமான விஷ்ணு, கோ முனியாகவும் பிசம்மன், பட்டி முனியாகவும் இருந்து பூசித்துள்ளனள். இங்கு நடராசர் திருமசலுக்கு நடன தரிசனம் தந்துள்ளனர். இங்குள்ள அதிமூர்க்கம்மனும் இறைவரைப் பூசித்துள்ளனர், இங்குள்ள இறைவச் சுயம்புமூர்த்தி, இவர் பட்டிசர். கோடீசுவரர் என்றும், தேவியார் பச்சை நாயகி, மரகதவல்லி என்றும் பெயர் பெறுவர். இங்குள்ள தீர்த்தம் பிரம்மதீர்த்தம். காஞ்சி நதி என்பன. காஞ்சி நதியை நொய்யலாது என்றும் கூறுவர். இத்தலத்துக்கு மூவர் பாடிய பதிகம் இல்லே என்ருலும், சுந்தரர் தாம் பாடியுள்ள சிதம்பரப் பதிகத்தில் (கோயில்) ஈற்றுப் பாடலில் இத்தலத்தில் தமக்கு இறைவர் தங்டனக்காட்சி அருளினமையினே மீகோங்கில் அணி காஞ்சிவாய்ப் பேரூர்ப் பெருமானப் புலியூர்ச்சிற்றம் பலத்தே பெற்ரும் அன்றே என்று பாடியுள்ளனர். இதில் இத் தலத்துக் காஞ்சி நதியின் குறிப்பு இருத்தலைக் காண்க மீகோங்கில் என்பது மேற்குத் திசையில் உள்ள கொங்கு நாடாம். இந்தக் கொங்கு நாட்டில்தான் பேரூர் இருக்கிறது. பேரூரில் சுந்தரர் கண்ட நடராசரின் நடன.கோலத்தை தினத்துதான், சிதம்பர நடராசர் முன் தாம் பதிகம் பாடும் போது குறிப்பிட்டுப் பாடினர். இத் தரிசனம் அவருக்கு அத் தலத்து அரசமரத்தடியில் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இத்தலத்தில் நந்தி மூலத்தானத்திற்கு தேராக இல்லாமல் ஒருபுறமாக ஒதுங்கி இருக்கும். இத்தலத்தில் பிறவாப்புளி, இறவாப்பன உள்ளன. பிறவசப் புளியை இக் கோவிலின் பெரிய கோபுரத்தின் அருகே காணலாம். இறவாப் புனே இங்குள்ள கிணற்றுக்கு அருகே இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/166&oldid=913290" இலிருந்து மீள்விக்கப்பட்டது