பக்கம்:திருவருட்பா-12.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமால் y (ஈண்டுச் சூரபதுமளுகிய மாமரம்) ஊர் ஏறி நடத்துகின்ற. உந - பொருந்த சிறுமை. தாழ்மை, கரு கருப்பத்தில் சென்று பிறத்தல். மால் . மயக்கம், மா - சிறந்த, குமர வள்ளல் - முருகன். (இலக்கணக் குறிப்பு) மா, உரிச்சொல் வணங்குவாம், உளப்பாட்டுத் தன்மைப் பன்ம்ை வினைமுற்று. தீர்த்து + எம், களித்து- அவர் எனப் பிரிக்க. (விளக்கவுரை) மகத முனிக்கும், விபுதை என்னும் இராக் கதப் பெண்ணுக்கும் பிறந்த கஜமுகா சூரனை விஞயகர் அடக்கியபோது, அவன் பெருச்சாளியாக மாறினன். அதனைக் கணபதி வாகனமாகக் கொண்ட குறிப்பும், சூரன் மாமரமாக நின்றபோது முருகன் அதனேயும் பிளக்க, அவன் சேவலும் மயிலுமாக வரச் சேவலக் கொடியாகவும், மயில் வாகனமாக வும் கொண்ட குறிப்பும் இப் பாடலில் உள்ளன, கணபதி பிரணவ வடிவினர். குமரவள்ளல் பிரணவப் பொருளாய் உள்ளவர். ஆகவே, பிரணவம் பொருந்தப்பெற்ற குமரக்கடவுளுடைய மந்திரமாகிய ஒம் குமாராய நம: என்னும் மந்திரத்தைப் போற்றினர் என்றும், சொருப வணக்க மும், தடத்த வணக்கமும் செய்தனர் என்றும் இப் பாடலுக் குப் பொருள் கூறலாம். திருவடிகளை ஞானம் என்று கூறுதல் சைவசித்தாந்த மரபு. அதனுல்தான் திருவள்ளுவரும் திருவடிகளேயே வணங்கினர். அவர் அடிஒற்றி, மணிவாசகப் பெருமாருைம் திருவடிகளையே முதற்கண் வாழ்த்துகிரும். அவர்க்குப்பின் வந்த திருநாவுக்கரசரும் திருவடிகளின் trண்பின் பெருமையை உணர்ந்தே, திருவதிகை வீரட்டானேசுவரனு டைய திருவடிகளையும், திருவையாற்றுப் பரமனுடைய திருவடிகளையும் போற்றிப் புகழ்ந்தனர். அவர்களின் வழி வந்த நம் வள்ளலாரும் அடிகளேயே போற்றி வணங்குவாம்" என்று கூறித் திருவடிகளே வணங்கினுள். திருச்சிற்றம்பலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/17&oldid=913298" இலிருந்து மீள்விக்கப்பட்டது