பக்கம்:திருவருட்பா-12.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 68 திருவருட்பா மாக உடல் மெலிந்து அவள் ஆடை கீழே விழுந்து விட்டது. அதனுல் இறைவர், பிறர் இகழத்தக்க ஆடையை உடைய வளே என்று கூறியதாகவும், எள்ளல் உடையாய் என்ப தற்குப் பொருள் கூறலாம். (104) உள்ளத் தனேயே போல்அன்பர் உவக்கும் திருவாழ் ஒற்றிஉள்: கள்ளத் தவர்போல் இவன்திற்கும் கருமம்என்னீர் இன்றென்றேன் மெள்ளக் கரவு செயவோதம் வேடம் எடுத்தோம் நின்சொல்லின் எள்ளப் புரிந்த தென்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ - பொ.) தோழி! நான், அன்பர்கன் தம் மனத்தில் தாயைப் போலவே எண்ணி விரும்புகிற செல்வப் பெருக்கு நிறைந்த ஒற்றியூரிலுள்ளவரே உள்ளே வராமல் திருடதைப் போல நீர் வெளியே நிற்கும் காரியம் என்ன? என்றேன். அதற்கு இவர், யாம் மெல்ல களவு செய்வதற்காகவா இவ் வேடம் எடுத்தோம்? உன் சொல்லே உன்னே இகழச் செய்தது' என்கின்றர். இதன் கருத்து என்னடி?” (எ . து.) (அ செ:,) அனேயே தாயே. உவக்கும் - மகிழும். இவண் - இங்கு. கதவு - வஞ்சகம். எள்ள இகழ. கருமம் - காரியம். (இ கு.) உள்ளத்து-அனேயே, இன்று + என்றேன், புரிந்தது என்கின்ருர், எனப் பிரிக்க. கரவு, முற்றியலுகரம். இமள்ள, குறிப்புப் பெயர் எச்சம். (வி . ரை.) உள்ளத்தனேயே போல் என்பதற்கு அன்பர்கள் எவ்வளவு கருதுகின்ருக்களோ அந்த அளவுக்கு அனுபவிக்கும் திகு (செல்வம்) நிறைந்த திருஒற்றியூர் என்றும் பொருள் கூறலாம். இறைவர் தலைவி வீட்டின்மூன் ស្ដេ திறவாது நின்றதால், 'ஏன் கள்ளத்தனமாக இவ்வாறு நிற் கின்றீர்கள்?’ என்று வினவினுள். தலைவி தம்மைக் கள்ளர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/179&oldid=913320" இலிருந்து மீள்விக்கப்பட்டது