பக்கம்:திருவருட்பா-12.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலே g ఫ్రి (அ - சொ.) தே - இனிய மா - மாமரம். பொழில் - சோலை, தகரக்கால் . தகராலயம், சிதம்பரம். ஆட்டுக்கல். ஆட்டத்துக்காகக் கால். குலம் - கோவில். இனம். சாதி, ஆ பூமி. மா - பெரிய விமுைத்து - விரும்பி. உற்றிர் . அடைந்தீர். புதுமை - ஆச்சரியம். ஆமா - காட்டுப் பசு. ஆம் ஆகும். ஆகுலம் - துன்பம். மா - சிறந்த பெரிய, ു - ിഖങ്ക്. (இ.கு.) தகர்+அ அ சாரியை. விழைந்து-உற்றில், மற்று+அரைக்குலம், கொண்டு+ஏமாந்தன எனப் பிரிக்க (வி - ரை). துலேவி, தகரக்கால் குலத்தை விழைந்தீன் என்றது, ஆட்டுக்குலத்தை விரும்பினர் என்றும், கால் எடுத்து ஆட்டம் செய்கின்ற கோயில விரும்பினர் என்றும் பொருள்படும் திலையில் கூறினுள். இறைவர் தம்மை ஆட்டுக் கால் குலத்தவன் என்று தலைவி கூறியதாகக் கொண்டு, தலைவியை நோக்கி 'நீ ஆமாக் (காட்டுப்பசு) குலத்தவள்’ என்றனர். ஆமா குலம் என்பதை இரண்டு விதமாகப் பொருள் கொள்ள வேண்டும். ஒன்று, 'ஆம்+ஆகுலம்’ என்பது, மற்றென்று, ஆ. மண குலம்’ என்பது. 'பெண்ணே நீ ஒரு பாதி ஆகுலத்தை (துன்பத்தை) உன் உள்ளத்தில் வைத்தும், மா குலத்தை (பெரிய குலம் என்று கருதுகிற குலத்தை) வெளியே வைத்துக்கொண்டு எம்மை இழிவாகப்பேசுகிருயே. ஒருமனப்படாத நீயா உன்னே உயர்குலம் என்று தினத்துக் கறிக்கொள்வது?’ என்று அவளே இழித்துப் பேசினுள் என்க. தம் உடம். பிரம்ம புரமாகும். இருதயத்தின் உள் வரிடம் தகரம் எனப்படும். இதனைப் புண்டரீக வீடு என்றும் கூறுவர். இத்தத் தகராலயத்தில் ஆகாசமான சிவன் வினங் குவன். இஃது அகத்தில் விளங்கும் அமைப்பு. புறத்திலும் இந்த அமைப்பு உண்டு. பிரம்மாண்டமே பிரம்மபுரம் இதனுள் விளங்கும் தில்லைவனம் (சிதம்பரம்) புண்டரீக விடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/200&oldid=913372" இலிருந்து மீள்விக்கப்பட்டது