பக்கம்:திருவருட்பா-12.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை | 93 காணப் புகழ்சேர் ஒற்றி உளிர் மன்ருர் தகர வித்தைதனைக் கனத் கினிதான் செயல்என்னே கருதி உரைத்தல் வேண்டும் என்றேன் வேணச் சுறும்மெல் லியலேயாம் விளம்பும் மொழி அவ் வித்தைஉனக் கேனப் புகலும் என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. | இ . பொ.) தேசழி! மிகுதியாகப புகழ் சேர்ந்துள்ள திருஒற்றியூரில் உள்ளவரே பொன் அம்பலத்தில் பொருந்திய தகர வித்தையைக் காண்பதற்கு இனிமேல் நான் செய்வது ய: தோ? ஆலோசித்து சொல்லவேண்டும் என்றேன். அதற்கு இவர், மன்மதனும் விரும்புகிற ம்ென் மையான் பெண்ணே! யாம் சொல்லிய சொல்லே அந்த வித்தையை உனக்கு உறுதி உண்டாகச் சொல்லும் என்கின்ருர். இதன் கருத்து என்னடி?” (எ . து.) (அ - செ.) மான மிகுதியாக மன்று - கில்லைப் பொற்சபை, தகரவித்தை இன்னது என்பதை முன்னர் விளக்கப்பட்டது. ஆண்டுக்காண்க. வேள் - மன்மதன், நச்சுறும் விரும்பும். ஏண - உறுதியுடன். சொல்லும் . புகலும். ஏண் - உறுதி. (இ - கு ) மன்று-ஆர், காண ற்கு-இனி, வேள்-- நச்சுறும், உனக்கு + ஏன எனப் பிரிக்க, தன், அசைச் சொல். (வி - ரை. மாண மாட்சிமைப்பட, என்றும் பொருள் கொள்ளலாம். மாண் - மாட்சிமை, தலைவி தகர வித்தை யைப் பற்றித் தான் அறியக் கூறுமாறு வேண்டினள். அதற்கு *பசம் கூறியுள்ள மொழிகள் சொல்லும்’ என்றனர். இறைவர் கூறியுள்ள மொழிகள் வேத ஆகமங்கள், ஞான சாத்திரங்கள். இ ை இறைவசூல் சொல்லப்பட்டவை ஆதலின், யாம் விளம்பும் மொழி என்றனர். சாந்தோக்ய உபநிடதம், கைவல்யோபநிடதம் முதலான 8.மொழி நூல்களில் உள்ள தகரவித்தையைப்பற்றிய விளக் கங்களைப் படித்தறிவது கடினம். ஆகவே, எளிதில் இத் தகர வித்தையினத் திருமூலர் திருமந்திரத்தில் உணரலாம்.(1 : 1) இ-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/204&oldid=913380" இலிருந்து மீள்விக்கப்பட்டது