பக்கம்:திருவருட்பா-12.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 திருவருட்பன் மலை. நுமை - உங்களே. புரத்தே - ஊரில், மதியம் - சந்திரன், எற்றைத் தினத்தும் - எந்த நாளிலும். இரவு - இராக்காலம், பிச்சை, (இ - கு.) வியப்பு + ஒன்று + உண்டு, விரிந்து+ஒரு. குவிந்தது- என்றேன், தேய்கின்றது--எற்றைத்தினத்தும், கொற்றம் - கமலம் எனப்பிரிக்க. மதியம், அம்சாரியை. (வி - ரை.) தலைவி, இறைவரிடம் இறைவரே! உமது ஊரில் பிச்சை எடுக்கும்போது தாமரை மலராம் கை விரிகிறது. குமுதமலர் வாய் குவிகிறது. இது வியப்டி அன்ருே?" என்று கேட்டனள். இதில் அமைந்த வியப்பு: இராக்காலத்தில் குவியவேண்டிய தாமரை விரிந்தது என்பது தும், இரவில் மலரவேண்டி குமுதம் குவிந்தது என்பதும்.ஆம். பகலில் சூரியனைக் கண்டால் தாமரை மலரும், இரவில் சந்திரனைக் கண்டு குமுதம் அலரும். இவ்வுண்மையை அமைத்துத் தலைவி கூறினுள். தலைவி, பிச்சை கேட்கும்போது இவ்வாறு ஏன் ஆகின்றன? என்று இறைவரை விகுவியபோது, இறைவன், 'பெண்ணே! உங்கள் புரத்தே (ஊரில்) இருப்பவர்கள் தனத்தை (பணத்தை, முலேயை) மிகுதியும் படைத்திருக் கின்ருர்கள். உங்கள் மதியம் (அறிவு) குறைதலால் கொடும் பீர்களோ, கொடுக்கமாட்டீர்களோ என்ற கருத்தில்தான் தாமரையை (கையை) விரித்து வாய்விட்டுக் கேட்க அஞ்சி, குமுதத்தை (வாயை) குவித்து நின்றனர்” என்றனர். தலைவி 'உமை விழைந்தார் ஊரில் கமலம் விகிந்து ஒரு கீழ்க்குளத்தே குமுதம் குவித்தது' என்று கூறியதற்கு மற்றும் ஒரு பொருளேயும் கூறலாம். அதாவது இறைவரே! உங்கண் விரும்பிய கந்தரர் பொருட்டுத் திருவாரூரில் இரவின்போது கி.ம் தாமரை மலர்போலும் திருவடி விசித்து நடத்து குளத்தின்கீழ் (நெற்றியின்கீழ்) இருக்கும் குமுதவாய் திறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/209&oldid=913390" இலிருந்து மீள்விக்கப்பட்டது