பக்கம்:திருவருட்பா-12.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமா8ல ! 3 மடையில் கயல்பாய் ஒற்றிநகர் வள்ளல் ஆகும் இவர்தமைதான் அடையில் கனிவால் பணிஎன்றே அருள்வீர் உரியீர் உடைஎன்றேன் கடையில் படும்ஒர் பணி.என்றே கருதி உரைத்தேம் என்றுரைத்தென் இடையில் கலையை உரிக்கின்ருர் இதுதான் சேடி என்னோடி. (இ.பொ.) தோழி! நீர் மடையில் கயல்மீன்கள் துள்ளு கின்ற அவ்வளவு நீர்வளம் பொருந்திய திருஒற்றியூரில் இருக் கின்ற வள்ளல் ஆகும் இவரை நான், குளிர்ந்த தோலாடை உடையவரே ! உம்மை வந்தடைந்தால், அன்பால் எனக்கு உமது தோல் ஆடையைக் கூடப் பட்டாடை எனக் கருதி அருள் செய்யவில்லையே' என்று கூறினேன். அவர் கடையில் விற்கப்படும் என் பட்டாடையை உரிப்பீராக என்று பொருள்கொண்டு என் இடுப்பில் உன்ள ஆடையை உரிக்கின்ருர், இதற்குக் காரணம் என்னடி?” (எ . து.) (அ - சொ.) மடை - நீர்மடை அடையில் நெருங்கி குல். கனிவால் - அன்பால், இரக்கத்தால். பணி கட்டளே இடுங்கள், பட்டாடை, உரியீர் உடை ஈரமான தோல் ஆடை, உரி தோல் ஆடை ஈர் - குளிர்ந்த, உரியீர் உடை ஆடையை நீக்குங்கள். பணி - பாம்பு, பட்டாடை. இடை இடுப்பு. கலை - ஆடை. (இ - கு.) என்று + உரைத்து-என் எனப் பிரிக்க, (வி ;ை.) தலைவி தோழியிடம் தோழி! நான், ஒற்றி யூராரே! தோலாகிய ஆடையைத் தருவீராக’ என்று கூறி னேன். அவர் எனதுடை, கடையில் விற்கப்படும். புதிய பட்டாடை. ஆகவே அதனே, இடுப்பிலிருந்து நீக்குவீராக்' என்று கூறியதாகக் கருதி 'என் கலையை இடையிலிருந்து நீக்குகின் ருர்' என்று கூறினுள். என்னத் தொட்டு உரிப்ப தற்குரிய ஆடைதான் (பணிதான்) என்று குறிக்கவே கடையில் படும் ஒர்பணி என்றனள். பணி என்பது பாம்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/23&oldid=913436" இலிருந்து மீள்விக்கப்பட்டது