பக்கம்:திருவருட்பா-12.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 திருவருட்பா நகரை யுடையவரே! முக்கண்களை ஒருசேரக் கொண்டவரே! என் ஆசையைக் கண்டும், இரக்கம் காட்டிலீரே! இதற்குக் காரணம் யாது?’ என்றேன். அதற்கு இவர், இசையின் இயல்பைக் கொண்ட இன்சொல்ல யுடையவளே ! உன் ஆசையானது பலநாளும் இன்சுவையைத் தருகிற பழம் போல மதிப்பைக் கொண்டிருந்தது' என்கிறர். இதன் பொருள் என்னடி ? ' (எ . து.) (அ - சொ) கள்-தேன். அளி-வண்டுகள். மிழற்றும். ஒலிக்கும், இரங்கீர் - இரக்கம் காட்டிலீர். பண் . இசை. எண் - மதிப்பு. (இ . கு.) எண் முதல் நிலைத் தொழிற் பெயர். கொண்டு + இருந்தது + என்கின் ருர் எனப் பிரிக்க, (வி ரை.) தலைவி தன் காதல் கண்டும் ஏன் இரக்கம் கொண்டிலிர், என்று விணுவினுள், அதற்கு இறைவர், :பெண்ணே ! உன் காதலைப் பல நாள் சுவைப்பதனுல் தானே யாம் இப்போது வந்தோம்' என்று அறிவித்தனர். உன் மீது கொண்ட காதல் பலநாள் சுவையைச் செய்கின்ற பழம் அன்ருே? அப்பழம் மதிப்பை அன்ருே கொண்டிருந்தது' என்ருர் , மேலும் பல் நாண் சுவைகொள் பழம்போலும் என்பதற்குப் பல்லேக் கூசும்படி செய்து, வாயில் நீரைச் சுரக்கச் செய்கின்ற புளியம்பழம்' என்றும் பொருள் கூறலாம். இதல்ை உன்னைப் பார்த்த அளவில் க்வைதரத் தக்க பழம் போன்ற உன் காதல் உளது' என்று இறைவர் கூறிஞர் எனவும் கொள்ளலாம். மேலும் இறைவன் தலைவி வருந்தத் தக்க முறையிலும் தம் காதல் அவளிடத்தில் இருக்கிறது என்பதை பல்நாண் கொளும் பழம்போல்’’ என்னும் உவமை யில் பொருத்திக் கூறினுள் என்க. அதாவது, உன் காதல் பல நாள் உண்ட பழம்போல் வெறுக்கத்தக்கது என்றும், புளியம் பழம் பழுத்த பிறகு தனக்கும் ஒட்டிற்குத் தொடர்பு இல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/237&oldid=913453" இலிருந்து மீள்விக்கப்பட்டது