பக்கம்:திருவருட்பா-12.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலே 篷3霞 உதயச் சுடரே அனயிர்தல் ஒற்றி உடையீர் என்னுடைய இதயத் தமர்ந் தீர் என்னேஎன் எண்ணம் அறியீ ரோஎன்றேன் கதையில் திகழ்வாய் அறிந்தன்ருே துறந்து வெளிப்பட் (டெதிர்அடைத்தால் இதையுற் றறிநீ என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ . பொ.) தோழி , உதய காலத்துச் சூரியனேப் போன்ற தேவரே !. நன்மை நிறைந்த திருஒற்றியூரை புடைய வரே! எனது இருதயத்தில் அமர்ந்திருப்பவரே அப்படி அமர்ந்திருந்தும் என் எண்ணத்தை அறியமாட்டீரோ? என்றேன். அதற்கு இவர் என்னே நோக்கி, அமுதம் போல விளங்குகின்றவளே ! உன் எண்ணம் அறிந்தன் ருே. அம்மனத்தில் இருப்பதை விட்டுப் புறப்பட்டு உனக்கெதிரே வந்தோம். இந்தச் செய்தியை நீ மனம் பொருந்தி ஆராய்ந்: தறிவாயாக’ என்கிருர். இதன் பொருள் என்னடி?'. (எ-து.) (அ - சொ.) சுதை - தேவா.முதம். (இ - கு.) சுதையில், இல் ஐந்தாம் வேற்றுமை ஒப்புப் பொருள். அடைந்தாம், தன்மைப் பன்மை விக்னமுற்று. அறிந்து + அன்றே, வெளிப்பட்டு + எதிர், உற்று + அறி எனப் பிரிக்க, உதயம் + இதயம் என்பன, உதையம் இதையம் என்ரு:பது, இடைப்போலி இலக்கணம் பற்றி என்க. . (வி - ரை.) தலைவி, நீர் என் இதயத்தில் இருந்தும், என் எண்ணத்தை அறிந்திலிசே' என்ருள். அதற்கு இறைவர், *உன் மனத்தில் இருந்து உன் எண்ணத்தை அறிந்ததகுல் தான், உன் எதிரே இதோ நிற்கிருேம்' என்ருர். என் எண்ணம் அறிந்திலிரோ?' என்ருள் தலைவி. 'உன் எண்ணம் என்னுடன் கலந்து இன்புற வேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/242&oldid=913465" இலிருந்து மீள்விக்கப்பட்டது