பக்கம்:திருவருட்பா-12.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை 233

  • இரைபும் புனல் செஞ் சடைமுடியும்

கடுஆர் மிடறும் இளமதியம் புரையும் கனலி மருப்பொளிரும் திருமார் பகமும் புலி அதள் சூழ் அரையும் கரியின் தலமிதித்த அழகார் வெங்கை அரன்தாளும் நிரையும் சுரக்கண் டுருஅனைத்தும் அருளே என்று நினைவாரே " ான்று கூறுதல் காண்க தலைவி இறைவரை நீர் யானையைக் கொன்று அதன் தோலே உரித்தீரே. இச்செயல் உமக்கு இரக்கம் உண்டா என் னும் ஐயத்தைத் தோற்று விக்கிறதே" என்று விணுவினுள், அதற்கு இறைவர், பெண்ணே! யாம் யானையைக் கொன்ருேம்; அதன் தோலே உரித்தோம். அதனோடு அந்த யானைக்குத் துயர் போயிற்று. ஆனால், நீ யானைக் கன்றை உன் நடையால் வென்று அதனை உயிரோடு கலக்கம் உறச் செய்கிறயே! இச்செயல் உன் உள்ளத்தின் இரக்கத்தைக் காட்டுமா ?' என்று கேட்டனர். பெண்களின் நடைக்கு யானையை உவமை கூறல் புலவர்களின் மரபு ஆதலின், இவ்வாறு கூறிஞர் யானே பெண்களின் நடை அழகிற்குத் தாம் நிகர் ஆகாமையினுல், கலக்கம் அடையும் என்பது உலவர் களின் கற்பனே. இறைவர் காசியில் யாவர்க்கும் தொந்தரவு கொடுத்து வந்த கயமுகச சூரனைக் கொன்ற குறிப்பு இப்பாட்டில் உளது. தலைவிக்கு இடை உண்டோ இல்லையோ என்று கருதும் அளவுக்குச் சிறுத்து இருந்தமையின், 'கரக்கும் இடையாய்' என்றனர். £149.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/244&oldid=913469" இலிருந்து மீள்விக்கப்பட்டது