பக்கம்:திருவருட்பா-12.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை 235。 மாகக் கொள்கின்ருயே) என்று இறைவர் கூறினர். இதன் உள்பொருள் வ&ளயல்களைக் கையில் ஏற்றிக்கொள்ளுதல், ஏறிடல் என்பதை இவரல் என்றும் கூறலாம். அந்த இவரல் என்பதற்கு விருப்பம் என்பது பொருள். ஆகவே, பசுங் கன்றை விரும்புகின்றன என்று கூறினர் என்க. பதம் கூறும் ஒற்சிப்பதி என்பதற்கு அழகுக்குச் சிறந்ததெனப்படுகின்ற திருஒற்றியூர் என்பதும் பொருளாம். (150) யோகம் உடையார் புகழ்ஒற்றி ஊரில் பரம யோசியரசம் தாகம் உடையார் இவர்தமக்குத் தண்ணீர் தரதின் தனஅழைத்தேன் போகம் உடையாய் புறத்தண்ணீர் புரிந்து விரும்பாம் அகத்தண்ணிக் ஈக மகிழ்வின் என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ - பொ.) தோழி : சிவயோக மார்க்கத்தை யுடையவர் புகழ்கின்ற திருஒற்றியூரிலுள்ள பரமயோகியரும் நீர் வேட்கை கொண்டவரும் ஆகிய இவருக்குத் தண்ணி கொடுக்க உன்ன அழைத்தேன். அதற்கு இவர் என்ன நோக்கி, போகத்தை யுடையவளே! புறத்தண்ணிரை மிகுதி யாக விரும்ப மாட்டோம். ஆதலால் மனம் மகிழ்ச்சியோடு அகத் தண்ணீரைக் கொடுக்கக் கடவை என்கின்ருச். இதன் பொருள் என்னடி ?” (எ . து.) (அ - சொ) பரம மேலான, போகம் - இன்பம், பெரும்பாக்கியம். புறம் - வெளி. அகம் - உள். புரிந்து காதலித்து. ஈக தருக. (இ - கு.) புறம் + தண்ணிர், அகம்-தண்ணிச் எனப் பிரிக்க, இவர் தமக்கு இதில் தம் என்பது அசை, ஈக, வியங்கோள் வினைமுற்று. (வி - ரை.) இறைவர் மனைவி மக்களே நீக்கிக் கல்லால மரத்தின் கீழ்த் தட்சணு மூர்த்தியாகி இருந்தார். ஆதலின் பரம யோகி எனப்பட்டார். அகத் தண்ணிக் ஈக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/246&oldid=913473" இலிருந்து மீள்விக்கப்பட்டது