பக்கம்:திருவருட்பா-12.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று கேட்டதன் குறிப்பு, உள்ளத்தில் அன்பு தன்மை கொண்டு இன்பம் தருக என்பதாம். போகம் என்பது இன் பத்தை உணர்த்தி, இந்த இன்பத்திற்குரிய பெண் குறியை உணர்த்தி, அந்தக் குறியை உடையவளே என்று பொருள் கூறினும் அமையும். யோகம் என்பதற்கு யோக சாதனத்தை மட்டும் உணர்த்தாமல் அதிர்ஷ்டத்தையும் உணர்த்தலின், புகழவேண்டும் என்னும் அதிர்ஷ்டம் உடையவர் புகழ் ஒற்றியூர் என்றும் பொருள் கொள்ளலாம். பேதகம் என்பதற் குப் பாம்பின் படம் என்பதும் பொருள். அப்பாம்பின் படம் கண்டு அதுபோலும் அல்குல உணர்த்தி அந்த நிதம்பத்தை உடையவளே என்னும் பொருளில் போகமுடையாய் என்று இறைவர் வினித்தார் என்றும் பொருள் காணலாம். (181) வளநீர் ஒற்றி வாணர்இவர் வந்தார் இன்சூர் மாதேநாம் உனநீர்த் தாகம் மாற்றுறுநீர் உதவ வேண்டும் என்ருர்தசம் குளநீர் ஒன்றே உளதென்றேன் கொள்ளேம் இடைமேல் கொளும்இந்த இளநீர் தருக என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ பொ.) தோழி ! வளமாகிய நீர் சூழ்ந்த ஒற்றி வாணராகிய இவர் வந்து நின்று, பெண்ணே ! யாம் உள்ளத்தில் அடைந்துள்ள நீர்த் தாகத்தைத் தணிக்கத் தகுந்த நீரே வேண்டும் என்றர். அதற்கு யான், குள நீ ஒன்றே உண்டு என்று சென்னேன். அதற்கு இவர், குளநீரை ஏற்றுக் கொள்ள மாட்டோம். இடைமேற் கொண்டிருக்கிற இந்த இளநீரைத் தரல்வேண்டும் என்கின் ருச். இதன் பொருள் என்னடி ?” (எ . து.) (அ - சொ. வாணன் - வாழ்பவர். ஆற்றுறு நீர் - வேட்கையைத் தீர்த்தற்குரிய நீர். இளநீர் - முலை. (இ . கு.) வந்தார். நின் ருர் இரண்டும் முற்றெச்சம். வந்து, தின்று என்பது பொருள். இளநீர் - உவமை ஆகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/247&oldid=913475" இலிருந்து மீள்விக்கப்பட்டது