பக்கம்:திருவருட்பா-12.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாக்ல 23? பெயர். உள்ளம் + நீர், வளம் + நீர், குளம் + தீர், உளது - என்றேன் எனப் பிரிக்க. (வி ரை.) இறைவர், தலைவி கொடுக்க விரும்பிய குளநீரை விரும்பாமல், இளநீரை வேண்டினர். ஈண்டு இளநீரை வேண்டுதல் என்பது இளநீர் போன்று பசூத்திருந்த முலைச் சுவையை வேண்டினர் என்பது. தாகம் மாற்றுறும் என்பதை தாகம் - ஆற்றுறும் என்றும், தாகம் + மாற்றுறும் என்றும் பிரிக்கலாம். அதுபோது, ஆற்றுறும் என்பதைப் போக் கும் என்றும், மாற்றுறும் என்பதை மாற்றும் என்றும், பொருள் கொள்ளுதல் வேண்டும். இறைவர் ஆற்றுறு நீர் உதவ வேண்டும் என்று கேட்டதாகக் கொண்ட தலைவி, "ஆற்று நீர் இல்லை, குடி நீர் உண்டு' என்றனள். குளநீர் என்பதற்கு இறைவர் வெல்லத கலந்த நீர் என்று, பொருள் கொண்டு (குளம் . வெல்லம்) வெல்ல நீர் தண்ணிர் தாகத்தை நீக்காது. ஆதலின் இளநீர் (தென்னமரத்து இளநீர்) வேண்டுமென் ருர் என்றும் பொருள் காண்க. தலைவி குள நீர் உளது என்ருள். தலைவி குள நீர் என்று கூறியதை இறைவர் நெற்றி நீர் என்று பொருள் கொண்டு, (குளம்-நெற்றி) அதன்பின் அந்நெற்றி இருக்கும், முகம் எனக் கொண்டு, முகம் என்னும் சொல் வடமொழியில் வாய் என்று கூறப்படுதலின் வாய் நீர் இருப்பதாகத் தலைவி கூறினுள் என்று கருதி, இவ்வாய் நீர் (பெண்ணின் உதட்டைச் சுவைத்தல் ஆகிய அதரபானம்) மட்டும் இருப்பதாகத் தலைவி கூறிஞள் எனவும் இறைவர் பொருள் கொண்டு, எமக்கு அதரபாது, மட்டும் போதாது, கொங்கை பானமும் (முலையைச் சுவைத் தலும்) வேண்டும் என்பார். 'இளநீர் தருக" என்றன; என்றும் பொருள் காண்க. 2 உள நீர்த்தாகம் என்பது உள்ள நீர் வேட்கை என்றும் உள்ள விரகதாகம் (காம வேட்கை) என்றும் பொருள்படு: நிலையில் உளது. (152)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/248&oldid=913477" இலிருந்து மீள்விக்கப்பட்டது