பக்கம்:திருவருட்பா-12.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 திருவருட்பா மெய்ந்நீர்ஒற்றி வானர்இவர் வெம்மை உளநீர் வேண்டும்என்ஜர் அந்நீர் இலைநீர் தண்ணீர்தான் அருந்தல் ஆக தோளன்றேன் முந்நீர் தனயை அனயீர்உம் முதுநீர் உண்டு தலக்கேறிற் நிந்நீர் காண்டி என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ பொ.) தோழி! மெய்ம்மைக் குணத்த்ை யுடைய திருஒற்றியூரில் வாழ்பவராகிய இவர், வெப்பமுள்ள நீர் வேண்டும்’ என்று கேட்டார். அதற்கு நான், அந்தநீர் இல்லை. தேவரீர் தண்ணிரைத்தான் குடிக்கலாகாதோ? என்றேன். அதற்கு இவர் என்னே நோக்கி: கடல் மகளா கிய திருமகளேப் போன்றவளே! இந்தப் பழைய நீரைக் குடித்ததால்தான் இந்நீர் தலைக்கேறி இருக்கிறது. இந்த நீரைம் பார் என்று சொல்லுகிருர். இதன் கருத்து என்னடி?” (எ-து.) (அ - சொ.) மெய்ந்நீர் - உண்மைத் தன்மை . தண்ணீர் - குளிர்ந்த நீள். முந்நீர் - கடல். தகனயை - பெண், அஆனயிர் - போன்றவரே. காண்டி - காண்க. (இ - கு.) மெய்மை + நீர்மை, தண்மை - நீர், மூன்று-நீர், முதுமை+நீர், அந்த + நீர் கலக்கு-ஏறிற்று+ இந்த-நீர் எனப் பிரிக்க. முந்நீர் அன்மொழித் தொகை, காண்டி: முன்னிலை ஒருமை வினே ஆற்று, (வி. ரை.) கடல் ஆக்கல், அளித்தல், அழித்தல், ஆகிய மூன்று தன்மைகளைப் பெற்றிருப்பதாலும் ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர் ஆகிய மூன்று வகைத் தண்ணிரைக் ஒதாண்டிருப்பதனுலும் கடல் முந்நீர் எனப்பட்டது. இலக்குமி கடலில் தோன்றினுள் ஆதலின், அவள் முந்நீர்க்குப் புதல்வி ஆயினுள். முதுநீர் என்றது பழைய தண்ணி என்று கொண்டு, அது கங்கை ஆற்றுநீர் எனப் பொருள்படுத்தி அதனை உண்டதல்ைதான் அது தலைக்கு ஏறிற்று என்று இறைவர் கூறினர். ஈண்டுக் கங்கை தம் தலையில் இருப்பத ஒல்தான் தலைக்கு ஏறிற்று என்றனர். தலைக்கு ஏறியது என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/249&oldid=913480" இலிருந்து மீள்விக்கப்பட்டது