பக்கம்:திருவருட்பா-12.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 திருவருட்பா கூந்தலை யுடையவளே! நீ கூறிய பஞ்ச காலம் நீங்குமானலும் நீ கூறுகிற வார்த்தை நிற்கும். இதனை அதுபவமாய்க் கண் டிருக்கின்ருய். இதனைச் சொல்லுதல் முறை ஆகுமோ? என்று சொல்லுகிருர். இதன் பொருள் என்ன டி?” (எ . து.) (அ.சொ.) சீலம் - ஒழுக்கம். கோலம் வேடம். கடன் - முறை, ஏலம் - மயிர்ச்சாந்து. குழல் - கூந்தல், (இ.கு.) சிறிது-ஆம் எனப் பிரிக்க. (வி - ரை.) இறைவர் பிட்சாடராக வரும்போதும் அழகுடன் வந்தார். மேலும் மேள தாளத்துடன் வந்தார். அதுபோது தலைவி இறைவரை இந்தப் பஞ்ச காலத்தினும் இப்படி, வரலாமோ?' என்று கேட்டாள். இதற்கு விடை ஆாக இறைவர், பெண்னே! நீ சொன்ன பஞ்சகாலம் போய் இடும். ஆனல் எம்மை நோக்கி இவ்வாறு ஆடம்பரமாக வர லாமோ? என்று கேட்கிருயே. இந்த வார்த்தை என்றும் அழி துரடில் அப்படியே நிற்கும்' என்று கூறினர். தலைவி இறை ஆர நோக்கி 'சுவாமி! இந்தச் சிறு விலை காலமாகிய பஞ்ச ஆத்தில், நாங்களும் வறுமை உற்றிருக்கின்ற காலத்தில் கூத்திரே!” என்று குறிப்பால் வினுவினுள். பஞ்ச காலத்தில் தானே பண்புடையோர் பிச்சை என்று வருபவர்க்கு இடல் வேண்டும்! இடத்தை விடுத்துப் பஞ்ச காலத்தும் கோலம் சார்ந்து பிச்சை கொளக் குறித்து விருவீர் என் என்று வினவ ஆசமோ? இச் சொல்லேக் கூறுவது கடனுமோ?’ என்று வினு விஞர். இங்குப் பஞ்ச காலத்தும் கோலம் சார்ந்து பிச்சை கொளக் குறித்து வருவீர் என்னும் வரி, தச்சரவம் பூண்டதில்லே நாதரே தேவரீர் பிச்சைஎ டுத் துண் ணப் புறப்பட்டும்-உச்சிதாமாம் காளம்ஏன் குஞ்சரம் ஏன் கார்க்கடல்போல் தான்முழங்கும் மேளம் ஏன், ரச சாங்கம் ஏன் ' என்னும் காளமேகப் புலவர் பாடலே நினைவூட்டுகிறது, (154)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/251&oldid=913486" இலிருந்து மீள்விக்கப்பட்டது