பக்கம்:திருவருட்பா-12.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 திருவருட்பா எனப் புணர்ச்சியில் நிற்கும். அப்போது எண்கு என்று ஆகும். விண்கு என்பதற்குக் கரடி என்பது பொருள். ஈண்டு எண்கின் (கரடியின்) பல்லே உணர்த்தி நீ கரடிப் பல்லால் ஆகிய வளையலே அணிந்தாய் என்றும் இறைவர் கூறிஞர் என்க. கொன்றைச் சடையீர் கொடுங்கோளுர் குறித்தீர் வருதற் கஞ்சுவல்யான் ஒன்றப் பெருங்கோள் என் மீதும் உரைப்பார் உண்டென் (றுணர்ந்தென்றேன் நன்றப் படியேல் கோவிலியம் நகரும் உடையேம் நங்காய்நீ இன்றச் சுறல்என் என்கீன்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ - பொ.) தோழி : கொன்றை மலர் மாலையைத் தரித்த சடையை புடையவரே : நீர் கொடிய கோளுரை யிடமாகத் திருவுள்ளம் பற்றினர். ஆதலால், உம்மோடு வருவதற்கு தான் அஞ்சுகிறேன். ஏனென் ருல் என் மேலும் பொருத்தமாகப் பெரிய கோள் சொல்லுவோர் உண்டென் றறிந்தேதான் அஞ்சுகின்றேன்" என்று சொன்னேன். அதற்கு இவர் என்ன நோக்கி, பெண்ணே! நல்லது, அப்படியாயின் யாம், கேரளில்லையாகிய நகரையும் உடையேம். ஆதலால் நீ இன்று அச்சமடைதல் எதற்கு? என்கின்ருர். இதன் கருத்து என்னடி? '. (எ . து.) (அ - சொ.) ஒன்ற பொருந்த, (இ - கு.) வருதற்கு + அஞ்சுவல். உண்டு + என்று + உணர்ந்து-என்றேன். நன்று + அப்படி இன்று-அச்சுறல், எனப் பிரிக்க. (வி . தை.) கொடுங்கோளுர் என்பது ஒரு சிவ தலம். ஆளுல் நால்வர்களின் பதிகம்பெற்ற தலம் அன்று. என்ருலும், கூேடித்திரக் கோவை ஐந்தாவது திருத்தாண்டகத்தில் அப்பர் இத்தலத்தைக் குறித்துள்ளார். ஆகவே இதனை வைப்புத்தலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/259&oldid=913502" இலிருந்து மீள்விக்கப்பட்டது