பக்கம்:திருவருட்பா-12.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை 艺4° என்னலாம். இத்தலம் சேர நாட்டில் உள்ளது. சோரனூர் இரயில் சந்திப்பிலிருந்து கொச்சி இரயிலில், திருஞாலக்கடை இரயிலடியிலிருந்து ஏழு கல் சென்று, அங்கிருந்து பன்னி ரண்டு கல்லில் உள்ள கருவப்படந்தையை அடைந்து, படகில் ஏறி, ஐந்து கல் சென்ருல் இத்தலத்தை அடைய லாம். இங்கு இருந்து மூன்று கல் சென் ருல், திருவஞ்சைக் களத்தையும் கண்டு வணங்கலாம். திருவஞ்சைக்களம் சுந்தரரால் பாடப்பெற்ற திருத்தலம். கொடுங்கோளுரே இடங்கழி நாயஞர் முத்தி பெற்ற தலமாகும். இத்தலத்து இறைவர் சிதம்பரேசர், தேவியார் சிவகாமி அம்மையார் எனப்படுவர். இறைவர், தாம் திருஉளங்கொண்டு எழுந்தருளியுள்ள தலம் திருக்கொடுங்கோளுர் என்றனர். தலைவி :-கூா8 இத்தகைய ஊருக்கு நானும் உம்மோடு வந்தால், உலகமக்கள் என்னைப் பெருங்கோள் கூறுவர். ஆகவே, உம்மோடு வர மாட்டேன்’ என்ற:ைள். உடனே இறைவர், பென்னே! எமக்குக் கோளிலி எனும் ஊரும் உண்டு' என்று கூறிஞர். திருக்கோளிலி என்பது சம்பந்தர், அப்பர், சுந்தரர், ஆகிய மூவராலும் பாடப்பட்ட தலம். இது திருநெல்லிக் காவல் இரயில் அடியிலிருந்து ஆறு கல் தொலைவில் உள்ளது. இறைவர் கோளிலிநாதேசுவரர், (கோவிந்தநாதர் என்றும் கூறுவர்) தேவியார் வண்டார் பூங்குழல் அம்மை என்றும் கூறப் பெறுவர். இத்தலத்தை இக்காலத்தில் திருக்குவளே என்பர். இத்தலத்துக்கு அருகில் குண்டையூர் என்னும் ஊர் உளது. இங்கிருந்த குண்டையூர்க்கிழார் சுந்தரருக்கு நெல்ல மிகுதியும் கொடுத்தனர். அதனே விட்டில் சேர்க்கச் சுந்தரர் இத்தலத்துப் பெருமானப் பாடி ஆள்களைக் கொண்டு நெல்லைத் தம் இல்லத்தில் சேர்க்கச் செய்த பெருமை தங்கிய தலமும் இதுவே. இத் தலத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/260&oldid=913506" இலிருந்து மீள்விக்கப்பட்டது