பக்கம்:திருவருட்பா-12.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை 25 # எங்கனம் வர இயலும்' என்று கேட்டபோது, இறைவச் 'பெண்ணே ! எம்மூர் நீ நினேக்கும் திரிகின்ற புலி இருக்கும் ஊர் அன்று. உன்னைப் போன்ற பெண்களைக் கண்டால் பயந்து ஒடும் புலி இருக்கும் ஊர். புவிக்கால் முனிவர் (வியாக்கரபாதர்) பூசித்துப் பேறு பெற்றதனுல் சிதம்பரம் புலியூர் என்று பேt பெற்றது. அப்புவி முனிவர், தூய அன்பினர் ஆதலின், பிறர் மனைவியைக் கண்டால் அஞ்சி ஒடுவர். ஆகவே நீ அஞ்சாது புலியூர்க்கு வரலாம் என்று கூறி இறைவர் தலைவியை அழைத்தனர். சிதம்பரமாம் புலியூர் சிதம்பர இரயில் அடிக்கு ஒரு கல் தொலைவில் உள்ளது. இதனக் கோயில் என்று சிறப் பித்துக் கூறுவர். கோவில் என்பது எல்லாத் தலங்களுக்கு உரிய பொதுப் பெயரானுலும் சிறப்பு முறையில் சிதம்பரத் தையே குறிக்கும். இத் தலத்திற்குத் தில்லைவனம், பெரும்பற்றப் புலியூர், புண்டரீகப்புரம், வியாக்கரபுரம், தகராகா கூேடித்திரம், பூலோக கயிலாயம் என்னும் பெயர்களும் உண்டு. இங்குள்ள தில்லை மூவாயிரவரைத் திருஞான சம்பந்தர் சிவ சாஆப்பிய ராய் எண்ணிப் பாடியுள்ளனர். மூவாயிசவருள் நடராசப் பெருமானும் ஒருவர் அல்லரோ ? இத் தலத்தில்தான் மணிவாசகப் பெருமான் ஊமைப் பெண்ணேப் பேசுமாறு செய்து, பெளத்தர்களே வாதில் வென்றனர். இவர் தங்கி இருந்த இடத்தைத் தில்லைக்காளிக் கோயிலுக்கு அருகில் காணலாம். தேவாரப் பதிகங்கள் கண்டெடுக்கப்பட்ட தலமும் இதுவே. சேக்கிழார் பெரிய புராணத்தைப் பாடி அரங்கேற்றிய திருப்பதியும் இதுதான். இத் தலம் தரிசிக்க முத்தி தருவது, இங்கு அர்த்த சாம பூசையைக் காண்பது பெரும் பேறு. காரணம், எல்லாத் தலங்களின் மூர்த்திகளின் கலைகள் அப்போது இங்குத்தான் வந்து ஒடுங்குகின்றன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/262&oldid=913509" இலிருந்து மீள்விக்கப்பட்டது