பக்கம்:திருவருட்பா-12.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 திருவருட்டா இத் தலம் தால்வரால் பாடப்பட்டது. இத்தலத்திற்குள்ள மூவர் பதிகங்கள் பதிளுென்று. திருவாசகப் பதிகம் இருபத் தைத்து. திருக்கோவையார் பாடப்பட்ட தலமும் இதுவே. பல நூல்கள் இத்தலத்தைப் பற்றியனவே, திருமூலர் திருமந்தி ரங்கள் பலவும் இத்தலத்தைச் சார்ந்தவைகளே. நடராசப் பெருமான் சிறப்பு முறையில் திருநடனம் புரியும் ஐந்து சபை களில் பொறி சபை இங்கு உளது. இந்த நடனம் ஐந்து தொழில்கன் புரியும் ஆனந்த நடனம் ஆகும். இங்குள்ள இறைவர் திருமூலநாதர் (இவர் இலிங்க வடிவினர்) தேவி யார் உமையம்மையார். நடராசப் பெருமான் சபாநாயகர் என்றும், இறைவியார் சிவகாமவல்லியார் என்றும் கூறப் பெறுவர். இத்தலத்து விருட்சம் ஆலமரம். பத்துத் தீர்த்தங் கள் இங்கு உண்டு. இவற்றுள் கோவிலுக்குள் இருக்கும் சிவ கங்கை சிறந்தது. இத் தலத்திற்கு அருகே திருநீல கண்டரை இளமை ஆக்கிய குளத்தையும், அதற்கு அருகில் உள்ள திருப்பு:ச்ேசிரத் தலத்தையும் கண்டு தரிசிக்கலாம். தெவ்வூர் பொடிக்கும் சிறுநகை.இத் தேவர் தமைதான் நீர்இருத்தல் எவ்வூர் என்றேன் நகைத்தனங்கே ஏழுக் நகலூர் என்ருச்பின் அவ்வூர்த் தொகையில் இருத்தல்அரி தம்என்றேன்மற் தில்எஸ்ஆர் இவ்வூர் எடுத்தாய் என்கின்கு இதுதான் சேடி என்னேடி. (இ - பொ.) தோழி பகைவர் ஊரைப் பொடி செய்த புன்சிரிப்பை யுடைய இந்தத் தேவரை யான், தேவரீர் இருப்பது எந்த ஊர்?' என்று கேட்டேன். - அதற்கு இவர் சிரித்து, பெண்ணே யசம் இருப்பது ஏழுரும் தாலுணரும்’ என்று சொன்னுள். அதுகேட்ட நான், 'அப்படியாளுல் அந்த ஊர்த்தொகையிலிருப்பது அரிதாகும்' என்றேன். அதற்கு இவர், அவை நாம் இருப்பதற்கு ஒவ்விய ஊர்களே. இவ்வூர்த் தொகை கொண்டு ஆய்க" என்கிரும். இதன் கருத்து என்னடி?”. (எ . து.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/263&oldid=913511" இலிருந்து மீள்விக்கப்பட்டது