பக்கம்:திருவருட்பா-12.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை 25.3 (அ - சொ.) அவ் - அவை. தெவ் - பகைவர். அணங்கே - பெண்ணே. {இ - கு.) தெவ், பண்பாகு பெயர். தம், சாரியை. தென்-உணர், எ + ஊர், நகைத்து + அணங்கே, அரிது-ஆம் மற்று + அதில் எனப் பிரிக்க. அவ் என்பது பன்மைச் சுட்டு. மற்று - அசை. (வி - சை.) இறைவர் தம்மூர் ஏழ்உணர், நாலூர் என்று தொகைப்படுத்திக் கூறினர். இவ்வாறு கூறக்கேட்ட தலைவி, பெருமானே! நால்கினர், ஏழ்ஷர் என்பன தொகையாக அல்லவோ இருக்கின்றன? இவ்வூர்களில் எப்படி ஒரே சமயத்தில் இருப்பது?’ என்று கேட்க, அதற்கு இறைவர், பெண்ணே! அவை தனித்தனி ஊர்களைக் கொண்டவையே. அவை எமக்கு ஒவ்விய ஊர்களே' என்றனர். இங்கு நம் வள்ளலார் கூறி இருக்கும் தொகைக்குறிப்பு, அப்பர் பெருமாளுர் கேஷத்திரக்கோவைத் தாண்டகத்தையும், அடைவு திருத்தாண்டகத்தையும் உட்கொண்டே ஆகும். கூேடித்திரக்கோவைத் தாண்டகத்தில் அப்பர்பெருமான் பாடல்பெற்ற தலங்களையும், வைப்புத் தலங்களையும் எடுத்து மொழிந்துள்ளார். அவை அனைத்தும் தொகையாகச் சொல் லப்பட்டனவேனும், காண்டகத்தில் உள்ள தலங்கள் தனித் தனித் தலமே ஆகும். இந்த இடங்களில் எல்லாம் இறைவர் உளர் என்பதை அப்பர் உணர்த்தினர் என்க. இவ்வாறே அடைவு திருத்தாண்டகத்திலும் அப்பர் இறைவருடைய பல் வேறு தலங்களைக் குறிப்பிட்டு இங்கெல்லாம் சிவபெருமானைக் காணலாம் என்தனர். இந்த உண்மையினே நீ ஆராய்ந்து தெளிந்து கொள்க என்பார். எவ்வூர் இவ்வூர் எடுத்து ஆய்' என்றனர். (16.2 )

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/264&oldid=913513" இலிருந்து மீள்விக்கப்பட்டது