பக்கம்:திருவருட்பா-12.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

之$器 திருவருட்பா (இ. பொ.) தோழி! ஆற்றைச் சடையிலே யுடையவ ராகிய இவர், பிச்சை என்று வந்தார். அதுபோது உமது ஊர் எது?’ என்றேன். அதற்கு இவர், எம்மூர் சோற்றுத்துறை: என்று சொன்னர். அது கேட்ட நான் இவரை நோக்கி, 'நீர் இருப்பதே சோற்றுத் துறையாளுல், உமக்குச் சோற்று வறுமை ஏன்? சொல்லும் என்று கேட்டேன். அதற்கு இவர், ‘யாம் உண்பொருளைத் தோற்றுத் திரிகின்ருேம் அல்லேம். உன்னைப்போலச் சோற்றுக் கருப்பாம் என்று உலகம் சொல்ல, அச் சொல்லை ஏற்றுத் திரியமாட்டோம் என்கிருர். இதன் பொருள் என்னடி ?” (எ . து.) (அ - சொ.) கருப்பு - பஞ்சம். இயம்ப கூற. (இ - கு) ஆறு + சடைவீர், என்று + அடைந்தார், உமது + ஊர் + யாது + என்றேன். கருப்பு + ஏன், என்று + உலகு + இயம்., எனப் பிரிக்க, (வி - ரை.) இறைவன் தமது ஊர் சோற்றுத் துறை என்று கூறிஞர். அப்படி இருக்க, நீர் ஏன் பிச்சைக்கு வந்தீர். உமக்குச் சோற்றுக்குப் பஞ்சமா?' என்று தலைவி கேட்டாள். அதற்கு இறைவன் பெண்ணே, நாம் கேள்விக் குப் பதில் கூற முடியாது. தோற்றுத் திரிவோம் என்று கருதாதே. நீதான் சொல்லுக்குப் பஞ்சமாகச் சரியான பதில் கூருது இருக்கிருய். இங்குச் சோறு உண்டு, ఖిణి శీఘ్ర என்று கூடக் கூற இயலாதபடி சொல்லுக்கும் பஞ்சமாகப் பேசாது இருக்கிருய். நாம் சோற்றுக் கருப்பர் அல்லர். நாம் தியாகர் என்று கூறி அவள் வாயை அடக்கினர், சொல்லும் கருப்பு என்பதற்குச் சொல் கரும்புபோல இனிமையானது என்றும் பொருள் காண்க. இவ்வாறு கூறுவதன் கருத்து சொல்தான் இனிமையானது. ஆளுல் செயல் இனிமை இல்லை' என்பதாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/267&oldid=913519" இலிருந்து மீள்விக்கப்பட்டது