பக்கம்:திருவருட்பா-12.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253 திருவகுட்பா (அ - சொ.) சிறுமை - பிச்சை ஏற்கும் குறைவு. எய்திற்று சேர்ந்தது. (இ கு.) தும் இடை, இடை ஏழன் உருபு, ஈங்கு - நீட்டல்விகாரம், எவன், ஏன் எனும் பொருளில் வந்த விஞ. விக்னக் குறிப்பு. சார்ந்தது + எவன், எய்திற்று + அலது.-- கண்டு-எமக்கு-இன்று-ஆல் எனப் பிரிக்க், ஆல், அசை. (வி ரை.} இறைவர் தம் ஊர் திருநெல்வாயில் என்று கூறிஞர். அப்படிக் கூறக்கிேட்ட தலைவி, அப்படியாளுல் தீச் ஏன் பிச்சை எடுக்கும் சிறுகையை அடைந்தீர்?' என்று விஞவிகுள்? அதற்கு இறைவர், உனக்கு ஏன் உன் இடுப்புச் சிறுமை அடைந்தது?’ என்று கேட்டார். அதாவது உன் னிடமும் சிறுமை இருக்கிறது என்று குறித்த்வாரும். பெண்களின் இடுப்புச் சிறிதாய் இருக்க வேண்டும் என்பது சாமுத்திரிகா இலட்சண விதி. திருநெல்வாயில் என்பது ஒரு சில தலம். இதனை மூவர் முதலிகளும் பாடி யுள்ளனர். இதற்குச் சிவபுரி என்னும் பெயரும் உண்டு. இது சிதம்பரம் இரயில் நிலையத்திலிருந்து தென் கிழக்கே மூன்று கல் தொலைவில் உள்ளது. இங்கு இரண்டு ஆலயங்கள் உள்ளன. வடக்கே இருக்கும் ஆலயம்தான் திருநெல்வாயில், இறைவர் உச்சிநாதேசுவரர் என்றும், தேவியார் கனகாம்பிகை என்றும் கூதப் பெறுவர். தெற்கே உள்ள ஆலயத்தில் திருக்கழிப் பு:இலத் தலத்து இலிங்கமாம், பால்வண்ண நாதர் இருக்கின் ருர். திருக்கழிப்பாலே கொள்ளிட நதியின் வுெள்ளத்தால் மறைந்தது. திருநெல்வாயில் அரத்துறை என்பது வேறு. அது பெண்ணுக. இரயில் நிலயத்திலிருந்து தென்மேற்கே தாலு: கல் தொலைவில் உள்ளது. திருஞான சம்பந்தருக்கு முத்துப் பல்லக்கு, முத்துச் சின்னம், முத்துக் இடை முதலியன தந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/269&oldid=913523" இலிருந்து மீள்விக்கப்பட்டது