பக்கம்:திருவருட்பா-12.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்கிதமாலை 9 முறையே சிவபெருமானின் அடிமுடிகளேத் தேடியும் காணுத குறிப்பு, இவ் வரியில் உளது. ஒற்றுதற்கு என்பதன் தொழிற் பெயர் ஒற்றுதல் என்பது. இந்தத் தொழிற்பெயர்க்குரிய விளைச்சம் ஒற்றி என்பது ஆகவே, தம் ஊரைச் சமத்காரமாக ஒற்றியூர் என்று கூறினர். ஒற்றி என்பதை ஒற்று என்னும் விண்ணப்பகுதிக்கு எச்சமாகக் கொண்டபோது ஒற்றி, வினே எச்சமாகும். ஒற்றி என்பதை ஒற்றியூர் என்பதன் மரூஉ வழக்காகக் கொண்டால் பெயர்ச்சொல் ஆகும். இந்த நுண் பொருள்களே யூகித்து அறியவேண்டி இருத்தலின் கண்டு அறி' என்றனர். ஆண் மக்களில் பெருமைக்குரியவனே செம்மல் எனப்படுவான். சிவபெரு ம:னத் தவிர்த்துப் பெருாைக்கு உரிய ஆண்மகன் எவனும் இல்லை ஆதலின் சிவனுரைச் செம்மால் என்று விளித்தள்ை. தலைவி ஒற்றியூர் என்று அறிந்தும் அதற்குரிய மற்குெரு பெயர் எது என்று கேட்டள்ை. அதற்கு விடையாகச் சிவ பெருமான் புரி என்னும் சொல் லுக்கு முன் மான் என்பது சேர்ந்த பெயரே, மற்கிருரு பெயர் என்றனர். மான் என்பது மூலப்பகுதி. இம்மான் என்பது பல தத்துவத் தோற்:ங் களுக்கு மூலம் (ஆதி) ஆகல்பற்றி மூலப்பகுதி ஆயிற்று. இந்த மானுக்குரிய வேறு ஒரு சொல்லாகிய ஆதி என்பது, புரி என்பதனுடன் சேர் ஆதிபுரி ஆகும். ஆதிபுரி என்பது திருஒற்றியூருக்குரிய மற்ருெரு பெயர் என்க. த8லவி இறைவனைப் பெருமையில் சிறந்தவனே என்னும் பொருளில் செம்மால் என்று கூறினுள். தகலவராம் இறைவர் தம்மைச் செம்மால் என்று விளித்ததாகக் கொண்டு தலைவியைத் திருமாலுக்குரிய தேவியாகிய திருவே என்று விளித்தனர். (7)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/29&oldid=913534" இலிருந்து மீள்விக்கப்பட்டது