பக்கம்:திருவருட்பா-12.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலே 2 : பொருளும் தோன்றும்படி தலைவி கூறினுள் என்க. இப்படிக் தலைவி பேசியதல்ை, தலைவராம் தியாக எண்கண் என்ப தற்கு அக்கண்(அதாவது என்னப் பார்க்கின்ற அக்கண்களே) உன்னோடு கூடி இன்புறுதற்குரிய வாய்ப்பை அளித்தது என்று கூறினர் என்றும் கொள்க. எண் என்பது எட்டு. எட்டுக்குரிய எழுத்து அ. ஆகவே அக்கண் ஆயிற்று. (8) ஆரா மகிழ்வு தரும்ஒருபேர் அழகர் இவர்ஊர் ஒற்றியதாம் நோய் விருத்துண் டோஎன்ருர் நீர்தான் வேறிங் கிலன்றேல் வாரர் முலையாய் வாய்அமுதம் மலர்க்கை அமுதும் ைஅமுதும் ஏராய் உணவே என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி? (இ பொ.) தோழி! அனுபவிக்க அனுபவிக்கத் தெவிட்டாத இன்பத்தைத் தருகின்ற ஒப்பற்ற பேர் அழகரின் ஒனர் திருஒற்றி நகராம். பிறகு அவர் எனக்கு நேராக வேறு விருந்து இங்கு வந்ததுண்டோ? என்று கேட்டார். நான், *நீர் தாம் விருந்து வேறு எவரும் இங்கு இல்லை' என்று கூறினேன். உடனே அவர், கச்சு அமைந்த முன்லயை யுடைய பெண்னே வாய் அமுதும், மலர்போன்ற கை அமுதும், மன அமுதும் ஆக மூன்று அமுதங்கள் இருக்கின் ஜனவே' என்கின்ருச். இதற்குப் பொருள் என்னடி?” (எ-து.) (அ சொ.) ஆரா - தெவிட்டாத நேராய் நேர் ை: யாக விருந்து-விருந்தினர், விருந்து உணவு. நீர்தான்-நீங்கள் தாம், தண்ணிச்தான். வார்-முலயைமறைக்க இறுக்கமாகச் கட்டப்படும் கச்சு (இக்காலத்தில் இதனை ஆங்கிலச் சொல் லால் பாடி என்பர்) வாய் அமுது - இதழ் சுவைத்தலாகிய இன்பம், இனிய பேச்சாகிய இன்பம், கை அமுது கையால் கொடுவந்த சோறு, கையால் தழுவி இன்புறும் இன்பம், மன அமுது- வீட்டில் இருந்து அனுபவிக்கும் புணர்ச்சி இன்பம், வீட்டு உணவு. மனே - வீடு, ஏராய் - அழகாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/31&oldid=913540" இலிருந்து மீள்விக்கப்பட்டது