பக்கம்:திருவருட்பா-12.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமா8ல 23 பார்த்திருப்பீர்களே. அங்கு நீர் அருந்தி வேட்கையைத் தீர்த்துக் கொள்வீர் என்று கூறினேன். நீ வாயால் கொடுத் தாய். ஆல்ை அப்படிக் கொள்ளும் இடத்தைக் கண்டதில்லை. ஆகவே, இடையில் அணிந்துள்ள ஆடையை எடுத்தால் கசண்போம் என்கின் ருர், இதற்கு என்னடி பொருள்? ' (எ . து.) (அ சொ:) தாகம் - நீர் வேட்கை, காம இச்சை. கடுத்தாம் - மிகுதியாகக் கொண்டுள்ளோம். கடி - மலர் மணம். தடம் - குளம். கடிதடம் - பெண்குறி, கருவுயி க் கும் குறி. ஐயம் - பிட்சை, சந்தேகம் கல் - ஆடை (இ கு) அடுத்தார்க்கு- அருளும், கண்டது + இக்ல எனப் பிரிக்க. (வி - ரை.) சுவாமி தலைவியைப் பார்த்துக் காமவேட் கையும், நீர் வேட்கையும் கொண்டுள்ளோம் என்று இரு பொருள்படும் நிலையில் மிகத் தாகம் கடுத்தாம் என்றனர். தகல்வியும் தன் விடையில் இரு பொருள் படும்படி கடிதடம் கண்டிர் கொளும்' என்றர். இதன் பொருள் நீங்கள் மிகுந்த காம வேட்கை கொண்டிருந்தால் இங்குக் கடிதடத்தை (பெண் குறியை)க் கண்டீர்களே. கொள்ளுங்கள் என்பதும், மிக்க தண்ணி வேட்கை கொண் டிருந்தால் கடிதடத்தை (மலர்மணம் நிறைந்த குளத்தை)க் கண்டிருப்பிரே கொள்ளுங்களே என்பதும் ஆகும். மேலும் அவள் கடிதடத்தைக் கொள்வதற்கு முன் ஐயத்தை (பிட்சையை) ஏற்றுக் கொள்ளுங்கள் என்ருள். தியாகர் தலைவியை நோக்கி நீ ஐயம் கொடுத்தாய். ஆனல், கடிதடம் (பெண் குறி. இதற்கு நிதம்பம், அல்குல் என்னும் சொற் களும் உண்டு) கண்டீர்' என்று கூறுகிருயே. நான் காண வில் வயே. அதனே (கடிதடத்தை) நீ ஆடைக்குள் அன்ருே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/33&oldid=913544" இலிருந்து மீள்விக்கப்பட்டது