பக்கம்:திருவருட்பா-12.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலே 23 (வி - ரை அறிந்தீர் என்று இறந்தகாலத்தில் இருக்க வேண்டிய வினைமுற்று. அறிவீர் என எதிர் காலத்தில் வந்தது கால வழுஅமைதி ஆகும். தலைவி நீங்கள் கொடைக் குணத்தர். உண்மை உணர்ந்தவர். அப்படி இருந்தும் நீங்கள் என்னிடம் பிட்சை கேட்கின்றீர்களே. இஃது உங்கட்கு இழிவு அன்ருே: என்றனள். பலி என்பதற்கு உயிரைக் கொல் செய் வது என்னும் பொருளும் இருத்தலின் தலைவி நீங்கள் கொடைக் குணத்தாராக இருந்தும் பலியை (உயிர்க் கொலையை) என்னிடப் விரும்புவது இழிவன்ருே" என்று கூறியதாகவும், உண்மை அறிவீர் என் எண்ணம் உணர் கிலி என்றும் இத்தொடர்க்குப் பொருள் காண்க. மேலும் தலவி, இறைவர் என் உழை எண்மை என் எண்ணத்தில் மயக்கம் இருப்பதால் அதை எளிதில் பெறலாம் என்பதை உணராமல், இருக்கின்றரே என்று சுருதி உணர்ந்திலரே என்று இழித்துக் கூறும் முறையில் உணர்கிலிர் என்று கூறிஞள் என்றும், பொருள் கொள்க. இப்படிக் தலைவி தலைவர் பலி (பிச்சை உன்னிடம் எளிமையில் شاهقة ترتي கிடைக்கும் என்று கருதித்தான் என்று கூறுவார்போல :எண்மை உணர்ந்தே பேசும்பலிக்கு அடைந்தது நாம்" என்று கூறிஞர். ($ 4) திருவை அளிக்கும் திருஒற்றித் தேவ சீர்க்கென் விழைவென்றேன் வேகுவல் உனது பெயர்இடைஓர் மெய்நீக்கியதின் முகம்என்டு தருவல் அதன் வெளிப்படையால் சற்றும் என்றேன் சற்றுவனேல் இருவை மடவாய் என்கின்கு இதுதான் சேடி என்னேடி. (இ. பொ.) தோழி! நான் மோட்சமாகிய செல்வத் தைத் தருகின்ற திருஒற்றியூரில் இருக்கும் தேவரீராகிய உங் கட்கு விருப்பம் யாது?’ என்று கேட்டேன். அதற்கு இவர், அஞ்சாதே உன் பெயரின் நடுவே இருக்கும் ஒரு மெய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/39&oldid=913557" இலிருந்து மீள்விக்கப்பட்டது