பக்கம்:திருவருட்பா-12.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 திருவருட்யா கழியா - (பெருமிதம்) நீங்காத பெருமிதம் - செருக்கு. இத்து சந்திரன், இரு நான்கு - எட்டு, (இரண்டு நான்கு) (இ கு. எமக்கு + ஒன்றே, நான்கு + உனக்கு. வியப்பு என், எனப்பிரிக்க, - (வி ரை. திருஒற்றியூர்த் தியாகரைப் பிரமன் ஒரு காலத்தில் போற்றிப் புகழ்ந்து பூசித்துள்ளான் ஆதலின். மறையோன் புகழ் ஒற்றி முதல்வர்" எனப்பட்டார். கழியா உன்றன் மொழி' என்றது, செருக்கு மொழி: கந்தை உடையீர்!" என்று இறைவரைக் Gడ్డt-g செருக்கு மொழி தானே கந்தை என்றது, இறைவர் அணிந்து வந்த கீழ் உடை (கெளபீனத்தை) என்க. இறைவர் மைக்கு ஒரு கந்தை என்ருலும், உனக்கு எட்டுக் கந்தை என்று கூறி அவள் பெருமிதப் பேச்சை அடக்கினர். அதாவது எட்டு என்னும் எண்ணக் குறிக்கும் தமிழ் எழுத்து அ என்பது. அதனேக் கந்தை என்னும் சொல்லுடன் சேர்க்கின் அகந்தை என்று ஆகும். ஆகவே, சிவபெருமான் எட்டுக் கந்தை உனக்கு உளது என்று கூறியதன் கருத்து உனக்கு அகந்தை உளது. அதனுல் என்னே ஒரு கந்தை உடையீர் என்று கூறுகின்ருய், நீ எட்டுக் கந்தை பெற்றிருப்பது வியப்பு அன்ருே?" என்று இறைவர் கூறிஞர். எட்டுக் கந்தை உனக்கு என்பதற்கு உனக்கு எட்டு கெஜ நீளமுள்ள ஆடை உள்ளது என்று கூறிஞர் எனவும் கூறலாம், நீ என்னே ஒரு கந்தையுடையதாய்க் இருக்கிறீர் என்று கூறுதற்குக் காரணம் உனக்கிருக்கும் அகந்தைதான் என் பதை வெளிப்படையாகக் கூருமல் உனக்கு, இருதான்கு கத்தை உள. என்று மறைமுகமாகக் கூறித் தலைவியின் செருக்கை அடக்கினர். (16)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/42&oldid=913565" இலிருந்து மீள்விக்கப்பட்டது