பக்கம்:திருவருட்பா-12.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமrலை 證鬆 மேன்றேன். இவர், நீ இட்ட பெயர் எதுவே:ா, அதுவே" என்கிருச். இதன் கருத்து என்னடி?” (எ . து.) (அ - செ.) ஆடல் - திருவிளேயாடல். உதும் - செய்யும். திதி செல்வம். (இ. கு. பாது - என்றேன், பறித்தது என்றேன், இட்டது - எதுவோ, எனப் பிரிக்க. (வி சை.) தலைவி இறைவரை, நீர் முன் நாடல் உறும் (விரும்பும்) பதி எது?’ என்று கேட்டள்ை. சுவாமி முன்னுடல் உறும் என்பதை முன் ஆடல் உறும் (அதாவது திருவிணே பாடல் புரிந்த ஊர்) பதியைக் கேட்பதாகக் கொண்டு, பெண்னே! நீ எம்மைத் தருமதுரையே என்னும் பெயர் சொல்லி விளித்தாய். அதில் முன் இரண்டு எழுத்துகளே நீக்கினுல் எப்பெயர் வருமோ. அப் பெயரே நாம் திருவிளே யாடல் புரிந்த நாடு என்றனர். அப்படிக் கூறியபோது தலைவி புரிந்து கொள்ளாமல் அப் பெயர் யாது?’ என்றள்ை. சுவாமி, 'நீ இட்டது எதுவோ அது காண்’ என்ருர். அதாவது தருமதுரையே என்பதில் தரு என்னும் இரண்டு எழுத்துக் களே நீக்கினுல் வரும் பெயர் மதுரையே என்பது. ஆகவே தசம் அறுபத்துதான்கு திருவிளையாடல் புரிந்த நாடு மதுரையே என்று விடை கூறினர். ஒரு காலத்தில் கடம்பக் காடாய் இருந்து குலசேக: பாண்டியகுல் நகரமாகச் செய்யப்பட்ட பதியே மதுரை. என்பது. சொக்கலிங்கப் பெருமான் தம் தலையில் உள்ள சந்திரனது மதுவைத் தெளித்து அப்பதியை இனிமையுறச் செய்தமையின் மதுரை எனப்பட்டது. வருணன் ஏவிய மேகங்கள் மதுரையை அழிக்க மழை பொழிந்தபோது சோம சுந்தரர் நான்கு மேகங்களைக் கூடமாகச் செல்லுமாறு ஏவி மதுரையை அழியாதபடி காத்தமையின் தான் மாடக் கூடல் என்னும் பெயரையும் பெற்றது. பாண்டியனுக்கு மதுரையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/49&oldid=913580" இலிருந்து மீள்விக்கப்பட்டது