பக்கம்:திருவருட்பா-12.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட்பெருஞ்சோதி ! தனிப்பெருங்கருனே !! பதிப்புரை திருவகுள் தூண்டுதலால் திருவருட்ப முழுவதுக்கும் உரை விளக்கம் வெளியிட விரும்பிளுேம். அதன் பயணுக வெளி வருவது இந்த 2வது வெளியீடு. இது முதல் திருமுறை 8ஆம் பகுதியான இங்கித மாலையின் உரை விளக்கம். மக்கள் குடும்ப இன்பத்தை யறிவர்; கடவுளே யடைந்து பெறும் பேரின்பத்தை யறியார். தெரிந்த ஒன்றைக் கொண்டு தெரியாததை விளக்குவது சான்ருேர் அரபு. அம் முறையில் இராமலிங்க அடிகளார் தம்மைத் தலைவியாகவும், இறை வனேத் தலைவனுகவும் கொண்டு இன்பப் பகுதியைப் பாடுவார் போலப் பேரின்ப நிலையை விளக்குகிரு.ர். இந்த விளக்க உரையை எழுதி உதவிய உயர்திரு பேராசிரியர், வித்துவான் பாலுக் கண்ணப்ப முதலியார், M. A., B.O.T., அவர்களுக்கும், அச்சிட்டுதவிய இரத்தினர் கிளை அச்சகத்தாருக்கும் எங்கள் உளங்கனிந்த நன்றி உரியதாகுக. சன்மார்க்க அன்பர்கள் முன் வெளிவந்த எங்கள் ! வெளியீடுகளை வாங்கிப் பயனடைந்து எங்களை ஊக்குவித்தது போலவே, இவ் வெளியீட்டையும் வாங்கி எங்களே ஊக்கு வித்து நலம்பெற விழைகின்ருேம். ஊ. வ. தட்சணுமூர்த்தி தலைவர், வ. ஆ. மாவட்ட சமரச சுத்த சன் மார்க்க சத்திய சங்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/5&oldid=913582" இலிருந்து மீள்விக்கப்பட்டது