பக்கம்:திருவருட்பா-12.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலே 53 (இ கு.) வேறு + உண்டோ, துமக்கு + என்தே, சென்று + இலம் எனப் பிரிக்க. மாலை என்பது குறுக்கல் விகாரத்தால் மலை என்ருயது. (வி - ரை.) தலைவி ஒற்றிப் பதியுடையீர்! என்று விளித்து உடனே பதி வேறு உண்டோ?’ என்று வினவி பதன் உள்பொருள், உம் ஊர்தான் ஒற்றிப்பதி (தள்ளி வைக் கப்பட்ட) ஊர் ஆயிற்றே, வேறு ஊர் உண்டோ?’ என்டி தாகும். ஒருமுறை அரசன், ஊரில் பஞ்சம் உண்டான போது, கோயில் நிமந்தங்களைக் (படித்தரத்தை) குறைக்கும் படி சாசனம் எழுதினுன். அச்சாசனத்தில் எழுதினேராலும் அரசனுலும் அறியப்படாத முறையில், 'ஆதிபுரி நீங்கலாக" என்று எழுதப்பட்டதனுல் ஆதிபுரி ஒற்றியூர் எனப்பட்டது. இதனைப் புலவர்கள் ஒற்றி (தள்ளிவைக்கப்பட்ட, அடகு வைக்கப்பட்ட) ஊர் என்று கூறுவர். அந்த வரலாதே ஒற்றிப் பதியுடையீர் என்பதில் அடங்கி உளது. இப்படித் தம்மூர் ஒற்றிப்பதி ஆகிவிட்டதனுல் வேறு பதி உளதே:' என்று கேட்டதாகக் கொண்டு, 'ஒற்றிப் பதியே ஆளுலும், எமக்கு வெள்ளிமலை, பொன்மலையாகிய தலங்களும் உண்டு என்றனர். பிறகு தலைவி நீண்ட மலை (மாலே) உண்டோ?’ என்று வினவியபோது, மல்ை என்னும் சொல்லின் நடுவில் த என்னும் எழுத்தைச் சேர்த்தால் வரும் மலே உண்டு என்றனர். அத வது, மலை என்பதன் நடுவில் த என்னும் எழுத்தைச் சேர்த் தால் மதலே என்ருகும். மதலை என்பதற்குக் கொன்றை மாலை என்பது பொருள். ஆகவே, இடைத்தவ் வருவித்த மலை காண்’ என்றனர். அதன்பின் தமக்குத் உண்டு என்பதை உணர்த்த மதலை என்பதில் உள்ள முதல் எழுத்தாகிய மகாரத்தை நீக்கத் தலை என்று நிற்பதைக் காட்டி நிறுவினர். இதனை அதனின் மம் முதல் சென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/63&oldid=913611" இலிருந்து மீள்விக்கப்பட்டது