பக்கம்:திருவருட்பா-12.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

w இந்நூலுள் பொதுவாகச் சிவபெருமான் எவ்வெவ்வாறு உணர்த்தப்பட்டுள்ளனர்? சிறப்பு முறையில் திருஒற்றியூர்த் தியாகர் எம்முறையில் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்?' என்பன வற்றை உணர்ந்து கொள்ளலாம். இவ்வாறே திருஒற்றியூரின் ஒப்புயர்வற்ற நீர்வளம், நிலவளங்களின் மாண்புகளும் சீரிய முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளன என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இந்நூலில் பற்பல சிவ தலங்களைப் பற்றிய குறிப்பும் காணப்படுகின்றது. மேலும் பற்பல அரிய குறிப்பு களும் இந்நூலில் உண்டு. இனி மேலே குறிப்பிட்டவைகளைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய செய்யுள்கள் இன்னின்ன என்பதை இங்குக் கொடுக்கப்பட்டுள்ள செய்யுள் எண்களின் வழி அறியவும். விநாயகப் பெருமானைப் பற்றிய குறிப்பு காப்புச் செய்யுளி லும் 28, 1 7-ஆம் செய்யுட்களிலும், முருகப் பெருமானப் பற்றிய குறிப்பு, காப்புச் செய்யுளிலும் 41, 81, 82, 3ெ, 1 17 எண்ணுள்ள பாடல்களிலும் காணப்படும். தைத்திரியவேதம் குறிப்பினே 9 2-ஆம் செய்யுள் உரை :பிலும், தகராலய இரகசியத்தைப் பற்றிய தெளிவினை 1 ! 8.ஆம் செய்யுளின் விளக்கத்திலும் நன்கு காணலாம். புராணக் கதைகள் 3, 66, 9 1, 1 23, 13 1, 133 ஆம் செய்யுட்களில் அமைந்துள்ளன. பழமொழிகள் 46, 1 02, 1 2' , 54, 15 5, 18 8 எண்ணுள்ள செய்யுளிலும், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பாக்களே ப்பற்றிய விளக்கம் 85வது செய்யுளின் உரை யிலும் விளக்கப்பட்டிருப்பதைப் படித்து இன்புறலாம். அப்பர், சம்பந்தர், சுந்தரர் பற்றிய வரலாற்றுக் குறிப்பு களே ,ே 6 ஆம் எண் பாடல்களில் அறியலாம். பஞ்சாட்சர மந்திரத்தின் குறிப்புகளே 5 4, 59, 70 எண் செய்யுள்களின் உரைகளில் கண்டு மகிழலாம். திருமாலும், இறைவர்க்கு மனேவியாவார் என்னும் குறிப்பு 58, 67, 7, 13 1 ஆம் செய்யுட்களின் மூலம் அறியவருகிறது நகைச்சுவை அமைந்த கருத்து 46 ஆம் செய்யுளில் தொனிக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/7&oldid=913626" இலிருந்து மீள்விக்கப்பட்டது