பக்கம்:திருவருட்பா-12.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலே 每拿 பொருள் காணுதல் வேண்டும். ஒன்று சுவாமி தம் கரத்தைத் தொட்டு என்பது. இதன் குறிப்புத் தம் கையில் காப்புக் கட்டிக் கொண்டு தலைவியை மணக்க வேண்டும் என்பது, கரம் தொட்டு என்பதற்கு மற்ருெரு பொருள், தலைவியின் கையைத் தொட்டு என்பது. இதன் பொருள் உன் கையைப் பிடித்து அதாவது பாணிக்கரகணம் செய்து, (பாணி. கை கிரகணம் - பிடித்தல்) மணப்பந்தலில் வலம் வரவேண்டும் என்பது. மிடற்றில் கையை வைத்த குறிப்பு, தலைவிகழுத்தில் தாலி கட்டிக் குடும்பத்தோடு வாழவேண்டும் என்பது. தமைக்காட்டி இச்சை எனயும் குறிக்கின்ருர் என்பதன் பொருள், தலைவியும் தாமும் சேர்ந்து வாழவேண்டும் என் பதை அறிவித்தவாரும். (87). மன்சூர் நிலையார் திருவொற்றி வாணர் இவர்தாம் மெளனமொடு நின்மூர் இருகை ஒலிஇசைத்தார் நிமிர்ந்தார் தவிசின் நிலைகுறைத்தார் நன்கு அழுது சிறிதுமிழ்ந்தார் நடித்தார் யாவும் ஐயம்என்றேன் இன்கு மரைக்கை ஏந்துகின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ . பொ.) தோழி பொற்சபையில் அமர்ந்த திலேயை புடையவரும், திருஒற்றியூரில் வாழ்கின்றவரும் ஆகிய இவர்தாம், மெளனநிலையோடு நின்று, இரண்டு கைகளைத் தட்டி ஒலி யுண்டாக்கினர்; நிமிர்ந்தார்; ஆசனத்தினிலயைக் குறைத்தார். நன்ருகிய அரிய உணவை சிறிது உமிழ்ந்தார் ; நடித்தார். இவற்றைக்கண்ட நான், ஐயரே இவை யாவும் ஐயமே என்று சொன்னேன். அதைக் கேட்ட இவர், இனிதாகிய தாம்ரை மலர்பேசலுத தமது கையை யேந்தி நின்ருள். இதுதான் செய்தி. இதன் கருத்து என்ன்டி?” (எ . து.) (அ - சொ.) மன்று. சிதம்பரப் பொற் சபை, தவிச் . ஆசனம். (உட்கார்ந்து கொள்ளும் புலித்தோல்) அமுது . உணவு- ஐயம். சந்தேகம், பிச்சை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/71&oldid=913630" இலிருந்து மீள்விக்கப்பட்டது