பக்கம்:திருவருட்பா-12.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலே 67 பென்னேக் கொடுத்தும் புணர்வரிய புனிதர் இவர்ஊர் ஒற்றியதாம் முன்னத் தவத்தால் யாம்காண முன்னே தின்மூர் முகம்மலர்த்து மின்னில் பொலியும் சடையீர்என் வேண்டும் என்றேன் உணச்செய்யான் இன்னச் சினம்கான் என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ - பொ.) தோழி : பொன்னேக் கொடுத்தாலும் அடைதற்கரிய பரிசுத்தராகிய இவரது ஊரானது ஒற்றியூராம். அத்தகையவர் முற்காலத்தில் நாம் செய்த தவப்பயணுல் பார்க்கும்படி முக மலர்ந்து தமக்குமுன் எதிரே தின் ருச். இப்படி நின்ற இவரை நோக்கி, மின்னலைப்போல விளங்கு கின்ற சடையையுடையவரே ! உமக்கு என்ன வேண்டும்' என்று வினவினேன். அதற்கு இவர், ! உண்ணும் பொருட்டுத் திருமகள் வீட்டை விரும்பினுேம்" என்கிருள். இதன் பொருள் என்னடி (எ . து.) (அ - சொ.) புணர்வு - சேர்தற்கு அரிய கடினமான, உண - உண்ண செய்யான் - இலக்குமி. இல் - விடு. தச்சினம் - விரும்பினுேம். (இ - கு) முன் + ஐ இதில் ஐ சாரியை. இல்-நச்சி னம். புணர்வு + அரிய எனப் பிரிக்க. கசண், முன் ணி: அசைச்சொல். 努°部 * (வி - ாை.) இறைவரது திருவருளே அடைதற்கு அன்பு ஒன்றே கருவி; பொன் அன்று. ஆதலின், பெசன்னைக் கொடுத்தும் புணர்வு அரிய புனிதர் எனப்பட்டார். இதனுல் பொன்னக் கொடுத்தால் எவரையும் அடையலாம் என்பது உள் பொருள் ஆதலக் காண்க. இறைவரைக் காணும் பேறு கிடைப்பதற்குக் காரணம் முன்னத் தவம் ஆதலின் 'முன்னம் தவத்தால் யாம் காண' என்றனள். செய்யாள் இல் நச்சினம் என்பதன் பொருள், இலக்குடி வின் வீடாகிய தாமரையை விரும்பினுேம் என்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/78&oldid=913644" இலிருந்து மீள்விக்கப்பட்டது