பக்கம்:திருவருட்பா-12.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை 7 : இரடபமாக வந்து சிவபெருமானத் தாங்கினமையின், சிவ பெருமான் ஏறுவது மால் விடையாயிற்று. அந்த கால் விடையின் உந்தி (கொப்பூழ் . தொப்புள்) தாமரைப்பூ ஆதலின், விழிமட்டும் பூ உந்தியது அன்று. நாம் ஏறு கின்றதும். பூ உந்தியது என்றனர்". பூ உத்தியது என்' தற்கும் பூவை உந்தியாக (கொப்பூழாக) உடையது என்னும் பொருளுடன், பூமி அளந்ததும் தாம் ஏறும் விடை என்று கூறினர் எனவும் பொருள் கொள்க. அப்போது, பூ என்பது பூமியையும், உந்தியது என்பது, கடத்ததையும் (அளத்தகை பும் குறிக்கும் என்று பொருள் காண்க. திருமால் மாவலிச் சக்ரவர்த்தியிடம் வாமனனுகச் சென்று தாம் தவம் செய்யத் தமதடியால் அளந்து கொள்ளக் தக்க மூன்றடி நிலம் வேண்ட, அவனும் மூன்றடிதானே என்று தந்துவிட, உடனே திருமால் திருவிக்ரம அவதாரம் எடுத்து மூன்றுலகங்களேயும் அளந்தனர். இந்தக் குறிப்பு "பூவுந்தியது” என்பதில் உளது. தலைவி ஏறுகின்றது தான் எது ' என்று கேட்டபோது தலைவர், பெண்ணே! எது என்னும் சொல்லின் நடுவே ஓர் எழுத்தை இட்டுப் பார்த்தால் உனக்கு தாம் ஏறுவது எது என்.:து தெரியும்’ என்று கூறிஞர், அதாவது எது என்னும், சொல்லின் நடுவே ரு என்னும் எழுத்தைச் சேர்த்தால் எருது என்று ஆகும். ஆகவே, தாம் ஏறுவது எருது என்பதை உணர்த்தினர். இது தெரியவில்லேயே என்பதை எண்ணிச் சுவாமி நகைத்தார் என்க. (44. இட்டங் கணித்த ஒற்றி உலீக் சண்டிவ் வேனே எவன்என்றேன் சுட்டும் சுதனே என்ருர்நான் சுட்டி அறியச் சொலும்என்றேன் பட்டுண் மருங்குல் பாவாய்நீ பசித்த தன்றே பார்என்றே எட்டும் கவிப்பால் உரைக்கின்ருர் இதுதான் சேடி என்னle.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/82&oldid=913654" இலிருந்து மீள்விக்கப்பட்டது