பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

碘_ திருச்சிற்றம்பலம் திரு வருள் முறையீடு

தோற்றுவாய் திருவருட்பாவின் முதல் திருமுறையில் ஆருவதாகத் திகழும் பகுதியே திருவருள் முறையீடாகும். முறையீடாவது குறைகளே அன்பும் அருளும் காட்டுவாரிடத்தில் கூறிக் கொள்வது. இந்த முறையீடு, வள்ளலார் சிவபெருமானிடத் தில் தம் குறைகளைக் கூறி முறையிட்டுக் கொள்ளும் முறை யில் அமைந்துள்ளது.

இறைவனுடைய திருவருளேப் பெற வேண்டி முறை யிட்டுக் கொள்வதல்ை இது திருவருள் முறையீடு என்று பெயர் சூட்டப்பட்டது.

திருவருள் என்பது இறைவனேயும் குறிக்கும் தொடச் ஆகும். ஆகவே, கடவுள் முன் நம் குறைகளைச் சொல்லி முறையிடுவது என்று இத்தொடர்க்குப் பொருள் கூறினும் கூறலாம்.

திரு என்பது முத்தித் திருவையும் குறிக்கும். ஆதலின், அந்த முத்தித் திருவாகிய அருளேப்பெற முறையிட்ட முறை யீடு என்று இத்தொடரை விளக்கினும் விளக்கலாம்.

திரு இறைவியையும், அருள் இறைவனேயும் குறிப்பு தாகக் கொண்டு, அவ்விருவரையும் நோக்கிக் குறைகஆனது கூறி முறையிட்ட முறையீடு என்று பொருள் காண்பதற்கும் இத்தொடர் இடம் கொடுக்கும்.

இன்ைேரன்ன பொருள் பொலிவுடைய இந்தத் திரு வருள் முறையீட்டுப் பகுதியில் இருநூற்று முப்பத்திரண்டு பாடல்கள் உள்ளன. இப் பாடல்கள் யாவும் கட்டஆாது, கலித்துறை என்னும் யாப்பால் அமைந்தவை.