பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 弧}勒

காது. இதைப்பற்றி உன்னை அடைந்து முறையிட்டு வருவது, இன்று மட்டும் அன்று. பல நாட்களாக அன்ருே உன் அணிடம் முறையிட்டு வருகின்றேன். நான் முறையிடுவது என்னே இந்தத் துயரத்தில் ஆழப்படைத்த பிர்மன் இருப்பிட மாகிய சத்திய லோகத்தில் சென்று அன்றே. உன்னிடம் தானே வந்து முறையிடுகின்றேன். பிறர் இது நல்ல் கன்று அன்று. கீழ்த்தரக்கன்று' என்று கூறக்கூடிய கன்று அன்றே தான். எவரும் நன்று என்று வரவேற்கத்தக்க பசுங்கன்று அன்ருே நான். ஆகவே, என்னைக் காத்தருள்க. (எ . து.)

(அ - சொ.) எதிர்த்த அடுத்துள்ள உற்று - நெருங்கி, அயன் மன்று - பிரமன் வீற்றிருக்கும் சபை. (சத்திய லோகம்) கயக்கன்று . கீழ்க்குலக் கன்று.

(இ - கு.) ஏகாரங்கள் அசை.

(வி. ரை.) பிரமன் உயிர்களை அவ்வவ்வுயிர்களின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்பப் படைக்கின்றன். அப்படிப் படைக்கப்பட்ட உயிர்கள், துன்பம் பொறுக்காமல் ஒருவேளை பிரமனே அணுகிக் கேட்டாலும், அவன் உன் வினேப்பகுதி என்று கூசாமல் கூறிவிடுவான். ஆகவே நான் அவனிடம் சென்று முறையிடமாட்டேன் என்னும் குறிப்பில்தான் ஈண்டு * அயன் மன்றலவே ' என்று அறிவிக்கப்பட்டது. பசும் கன்றைப் போற்றுவதுபோல ஏன்யவற்றின் கன்றைப் பிறர் போற்ருர் ஆதலின் 'கயக்கன்றலவே பசுங்கன்று அடியேன்” என்று வள்ளலார் கூறிக் கொள்கின்றனர். (78)

படிபட்ட மாயையின் பால்பட்ட சாலப் பரப்பில்பட்டே பிடிபட்ட வாழ்க்கையில் மேல்பட்ட துன்ப விசாரத்தினுல் அடிபட்ட நான் உனக் காட்பட்டும் இன்னும் அலைதல்நன்ருே பிடிபட்ட நேர்இடைப் பெண்பட்ட பாகப் பெருந்தகையே.