பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$92 திருவருட்யா

(பொ - ரை.) பெண்யானையைப் போன்ற நடையும், துணுகிய இடையும் கொண்ட உமாதேவியைப் பக்கத்தே கொண்ட பெருந்தகையே! உலகில் நிறைந்த மாயையின் வலையில் மிகுதியும் சிக்கி, வறுமையுற்ற வாழ்க்கையின் துன் பத்தால் அடிபட்ட நான் உனக்கு அடிமைப்பட்டும் இன்ன மும் அலைதல் நன்ருே ? (எ . து.)

(அ - சொ.) பிடி - பெண் யானே. பெண் - உமாதேவி. பெருந்தகை - பண்பாடு நிறைந்த இறைவன். படி - உலகு. கால . மிகுதியும். மிடி - வறுமை.

(இ . கு.) பெருந்தகை, அன் மொழித் தொகை, சால, உரிச்சொல். துன்பம் எனினும் விசாரம் எனினும் ஒன்றே. ஒரே பொருளைக் குறிக்க இருசொற்கள் வருமாயின் அதனை ஒரு பொருள் பன் மொழி என்பர். (77)

உடையாய்என் விண்ணப்பம் ஒன்றுண்டு கேட்டருள் உன்அடிச்சீர் தடையாதும் இன்றிப் புகல்வதல் லால்இச் சகத்திடைநான் நடையால் சிறுமைகொண் டந்தோ பிறரை நவின்றவர்.பால் அடையா மையும்நெஞ் சுடையாமை யும் தந் தருளுகவே.

(பொ. ரை.) உவகில் உள்ள எல்லாப் பொருள்களை யும் உடைமையாகக் கொண்ட இறைவனே ! உன்னிடம் அறிவித்துக் கொள்ளும் வேண்டுகோள் ஒன்று உண்டு. அதனைக் கேட்டருள்க. அதாவது நான் திருவடியின் சிறப்பைத் தடை சிறிதும் இல்லாமல் புகலுதல் வேண்டும். இந்த உலகில் நான் செல்வக் குறைவு காரணமாக ஐயோ பிறரை நாடி அவர்களிடம் இல்லாத குணங்களே எடுத்துச் சொல்லி அவர்களை அடையாதிருத்தலும், என்மனம் துயரால் உடையாமல் இருத்தலும் ஆகிய இவ்விருவரங் களேத் தந்தருள். இவையே என் விண்ணப்பம்." (எ . து.)

(அ - சொ.) புகல்வது . கூறுவது. சகம் - உலகம். தடை - செல்வம். சிறுமை - குறைவு. நவின்று - சொல்லி.