பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு $$

தஞ்சமென்றேlன்ற நாயேன் குறையைத் தவிர்உனக்கோர் பஞ்சமின்றேஉல கெல்லாம்தின் சீர்அருள் பங்குகண்டிாய் எஞ்சரின் றேற்குண் அல்லால் துணைபிறி தில்லை.இது வஞ்சமன் றேரின் பதம்காண்க முக்கண் மணிச்சுடரே.

(பொ. ரை.) மூன்று கண்களையுடைய நவமணிகளைப் போல ஒளிவிடுகின்ற பேரொளிப் பிழம்பே உனது பாதங் களே அடைக்கலம் என்று உன் திருமுன் நிற்கின்ற நாயின் கடைப்பட்ட என் குறைகளைப் போக்குக. என் குறைகளைப் போக்குவதில் உனக்குப் பஞ்சமா ? இல்லையே. உலகம் முழுவதும் உன் சீரும் அருளும்தாமே இடம் கொண் டுள்ளன. குறையுடன் வாழும் எனக்கு உன்னத் தவிர்த்து வேறு துணை யாரும் இல்லையே. இப்படி நர்ன் சொல்வது கபடம் அன்றே; ஆகவே என் நிலமையினக் கண்டு திருவருள் புரிக' (எ . து.)

(அ - சொ.) தஞ்சம் . அடைக்கலம். குறை - குறை கள். பாங்கு ~ இடம். எஞ்ச குறையுடன். (79)

பொறுத்தாலும் நான்செயும் குற்றங்கள் யாவும் பொருதெனநீ ஒறுத்தாலும் நன்றினிக் கைவிட்டி டேல்என் உடையவன்c வெறுத்தாலும் வேறிலை வேற்ருேர் இடத்தை விரும்பிஎன்ன அறுத்தாலும் சென்றிட மாட்டேன் எனக்குன் அருன்இடமே. (பொ. ரை.) நான் செய்கின்ற குற்றங்கள் எல்லா வற்றையும் பொறுத்தாலும் பொறுக்கலாம். என்னைத் தண் டித்தாலும் நல்லதே. இனி என்னேக் கைவிடேல். நீ என்னே அடிமையாக உடையவன். என்ன வெறுத்தாலும் நான் சென்று அடையத்தக்க இடம் வேறு எனக்கு இல்லை. என்ன அறுத்துப் போட்டாலும் வேருேச் இடைத்தை விரும்பிச் செல்ல மாட்டேன். எனக்கு உன் அருள்தான் இடம் வேறு அன்று." (எ . து.)